AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: கோலி முதல் ரெய்னா வரை.. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்..!

IPL Highest Run Scorers: ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலிதான் (Virat Kohli) அதிக ரன்கள் எடுத்தவர். அவர் 8,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு முதல் விளையாடி வரும் விராட் கோலி ஐபிஎல்லில் பல வகையான சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

IPL 2026: கோலி முதல் ரெய்னா வரை.. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்..!
ஐபிஎல்லில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Mar 2026 16:42 PM IST

ஐபிஎல் (IPL) வரலாற்றில் பல வீரர்களும் பல தரப்பட்ட சாதனைகளை படைத்துள்ளன. அதில், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள், அதிக பவுண்டரி அடித்த வீரர்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் என பல சாதனைகள் குவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பற்றி தெரியுமா..? ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலிதான் (Virat Kohli) அதிக ரன்கள் எடுத்தவர். அவர் 8,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு முதல் விளையாடி வரும் விராட் கோலி ஐபிஎல்லில் பல வகையான சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சிஎஸ்கே முதல் எல்எஸ்ஜி வரை.. ஐபிஎல்லில் விளையாடும் 10 அணிகளின் முழு விவரம்..!

விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 8661 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். கடந்த 2008ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்த விராட் கோலி, தற்போது (ஐபிஎல் 2026) வரை ஆர்சிபி அணியில் அங்கமாக இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி, கடந்த ஐபிஎல் 2016 சீசனில் விராட் கோலி 973 ரன்கள் குவித்தார். இது ஒரு ஐபிஎல் சீசனில் எந்தவொரு வீரரும் எடுத்த அதிகபட்ச ரன்னாகும்.

ரோஹித் ஷர்மா (மும்பை இந்தியன்ஸ் / டெக்கான் சார்ஜர்ஸ்)

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 7046 ரன்களுடன் ரோஹித் சர்மா 2வது இடத்தில் உள்ளார். கடந்த 2008ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் ஐபிஎல் பயணத்தை தொடங்கிய ரோஹித் சர்மா, 2011ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்துள்ளார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாகவும் திகழ்கிறார்.

ஷிகர் தவான் (மும்பை இந்தியன்ஸ் / டெக்கான் சார்ஜர்ஸ் / சன்ரைசர்ஸ் ஹைதராபாத் / டெல்லி கேப்பிட்டல்ஸ் / பஞ்சாப் கிங்ஸ்)

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 6769 ரன்களுடன் ஷிகர் தவான் 3வது இடத்தில் உள்ளார். கடந்த 2008 முதல் 2024 வரை ஐந்து வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி, ரன் மெஷினாகவும் திகழ்ந்தார். கடந்த 2024ம் ஆண்டு ஐபிஎல் உள்பட அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார்.

டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் / டெல்லி கேப்பிட்டல்ஸ்)

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 6565 ரன்களுடன் டேவிட் வார்னர் 4வது இடத்தில் உள்ளார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வெளிநாட்டு பேட்ஸ்மேனாகவும் திகழ்கிறார். கடந்த 2009 முதல் 2024ம் ஆண்டு வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்காக விளையாடி, இத்தகைய ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதுமட்டுமின்றி, கடந்த 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தலைமை தாங்கி சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார்.

ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிக நீளமான சிக்ஸர் எது..? அடித்த வீரர் யார்?

சுரேஷ் ரெய்னா (சென்னை சூப்பர் கிங்ஸ் / குஜராத் லயன்ஸ்)

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 5528 ரன்களுடன் 5வது இடத்தில் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கின் முதுகெலும்பாக இருந்த சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கே அணி இடைநீக்கம் செய்யப்பட்டபோது, ​​அவர் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடியானார். யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 2021 ஐபிஎல்லிலிருந்து ஓய்வு பெற்றார்.

Follow Us