AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: முதல் நாளே ஐபிஎல்லில் களமிறங்கும் கோலி.. ரோஹித், தோனியின் போட்டிகள் எப்போது?

IPL 2026 Schedule: இந்தியன் பிரீமியர் லீக் 2026 இன் முதல் கட்ட அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. 2026 மார்ச் 28 முதல் 2026 ஏப்ரல் 12 வரை போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் திட்டமிடப்பட்டுள்ளன, எனவே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே முழு போட்டி அட்டவணையும் வெளியிடப்படும்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Mar 2026 22:21 PM IST
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அதாவது 2026 மார்ச் 11ம் தேதி ஐபிஎல் 2026க்கான அட்டவணையை வெளியிட்டது. இருப்பினும், 5 மாநில தேர்தல் காரணத்திற்காக போட்டியின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது. அதன்படி, ஐபிஎல் 2026 அட்டவணையானது 2 அல்லது 3 கட்டங்களாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 / 6
இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக, ஐபிஎல் அட்டவணையின் முதல் கட்டத்திற்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது, இதில் 20 போட்டிகள் விளையாட உள்ளன. எனவே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே முழு போட்டி அட்டவணையும் வெளியிடப்படும். 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு விளையாடுகின்றன.

2 / 6
ஐபிஎல் 2026 சீசனின் முதல் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் விராட் கோலி களமிறங்குவார்.ஆர்சிபி இந்தியன் பிரீமியர் லீக்கின் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்குவதால், விராட் கோலி வெற்றிப் பயணத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பார்.

3 / 6
விராட் கோலி தொடர்ந்து எம்.எஸ். தோனி மற்றும் ரோஹித் சர்மாவின் ரசிகர்களும் அவர்களின் ஆட்டத்தைப் பார்க்க ஆவலுடன் இருப்பார்கள். இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனியும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மாவும் எப்போது களமிறங்குவார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

4 / 6
2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை ரூ. 16.30 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. மும்பை இந்தியன்ஸ் அணி வருகின்ற 2026 மார்ச் 29 அன்று மும்பையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடும். வருகின்ற 2026 மார்ச் 29 அன்று ரோஹித் சர்மாவையும் விளையாடுவதை காணலாம்.

5 / 6
எம்.எஸ். தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.4 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது. சி.எஸ்.கே அணியின் முதல் போட்டி 2026 மார்ச் 30 ஆம் தேதி கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும். இந்த போட்டியில் எம்.எஸ். தோனியும் விளையாடுவதைக் காணலாம்.

6 / 6
Follow Us