AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல்லில் மிக மெதுவான சதம்.. முதலிடத்தில் விராட் கோலி..!

Slowest Centuries in IPL: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 2011 ஐபிஎல் சீசனில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிராக 66 பந்துகளில் சதம் அடித்தார். தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்ய கிட்டத்தட்ட 11 ஓவர்களை எடுத்து கொண்டனர். அதே சமயம், கே.எல். ராகுல் 2016 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 64 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார்.

IPL 2026: ஐபிஎல்லில் மிக மெதுவான சதம்.. முதலிடத்தில் விராட் கோலி..!
ஐபிஎல்லில் மிக மெதுவான சதம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Mar 2026 19:00 PM IST

கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதும் ஐபிஎல் 2026 (IPL 2026) சீசன் தொடங்கும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஐபிஎல் தொடரில், அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடுகிறார்கள். எனவே, ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை, பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்குவதே ரசிகர்கள் விரும்புவார்கள். ஐபிஎல்லில் பேட்டிங் மூலம் பல சாதனைகள் படைக்கப்படுகின்றன. டி20 கிரிக்கெட் என்பது 120 பந்துகள் கொண்ட ஒரு போட்டியாகும். அதிலும் கூட, சதம் அடிப்பதே ஒரு பெரிய விஷயமாகும். கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா (Rohit Sharma), விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் வரலாற்றில் பல சதங்களை அடித்துள்ளனர். அந்தவகையில், ஐபிஎல் வரலாற்றில் மிக மெதுவாக சதம் அடித்த 5 பேட்ஸ்மேன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: தோனியா? ரோஹித்தா? ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் யார்?

5 பேட்ஸ்மேன்கள் மிக மெதுவான சதம்:

ஐபிஎல்-லில் மிக மெதுவான சதம் அடித்த சாதனையை மனிஷ் பாண்டே மற்றும் விராட் கோலி இருவரும் ஒன்றாக முதலிடத்தில் உள்ளனர். விராட் கோலி கடந்த 2024 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 67 பந்துகளில் சதம் அடித்தார். அதே சமயம், மனிஷ் பாண்டே 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 67 பந்துகளில் சதம் அடித்தார். இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் தங்களது அதிரடி பேட்டிங்கிற்காக அறியப்பட்டவர்கள். இருப்பினும், இந்த மோசமான சாதனையை தங்களது பெயரில் வைத்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 2011 ஐபிஎல் சீசனில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிராக 66 பந்துகளில் சதம் அடித்தார். தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்ய கிட்டத்தட்ட 11 ஓவர்களை எடுத்து கொண்டனர். அதே சமயம், கே.எல். ராகுல் 2016 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 64 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். இவருக்கு அடுத்த இடத்தில் ஐபிஎல் 2018 சீசனில் அம்பதி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 62 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார்.

ஐபிஎல்லில் மிக மெதுவான சதம்:

  • விராட் கோலி , ஐபிஎல் 2024, 67 பந்துகளில் சதம்
  • மணீஷ் பாண்டே, ஐபிஎல் 2009, 67 பந்துகளில் சதம்
  • சச்சின் டெண்டுல்கர், ஐபிஎல் 2011, 66 பந்துகளில் சதம்
  • கே.எல். ராகுல், ஐபிஎல் 2019, 64 பந்துகளில் சதம்
  • அம்பதி ராயுடு, ஐபிஎல் 2018, 62 பந்துகளில் சதம்

ALSO READ: 2008 முதல் 2025 வரை.. ஐபிஎல் பட்டத்தை வென்ற அணிகளின் பட்டியல்!

ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்தவர் யார்..?

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிவேக சதம் வெறும் 30 பந்துகளில் அடிக்கப்பட்டது. இந்தச் சாதனையை யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் நிகழ்த்தினார். கடந்த ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி வெறும் 45 பந்துகளில் சதம் அடித்து மிக இளம் வயதில் ஐபிஎல்லில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Follow Us