AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: தோனியா? ரோஹித்தா? ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் யார்?

Best Captain of the Franchise IPL: ஒரு ஐபிஎல் சீசனில் கேப்டனாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே படைத்துள்ளார். ஷேன் வார்னே கேப்டன்சியின் கீழ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் 2008 சீசன் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு முறை கூட சாம்பியன் ஆனது கிடையாது.

IPL 2026: தோனியா? ரோஹித்தா? ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் யார்?
ஐபிஎல் பெஸ்ட் கேப்டன்கள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Mar 2026 15:16 PM IST

இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது (IPL 2026) சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. அதாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஐபிஎல் 2026 சீசன் வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கவுள்ளது. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bengaluru) களமிறங்குவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேநேரத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கடந்த 2016ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, ஐபிஎல்லில் பல அணிகளும் கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளன. அந்தவகையில், ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் யார் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்:

இந்திய அணியின் ஜாம்பவான்களான எம்.எஸ்.தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 5 முறை ஐபிஎல் வரலாற்றில் தங்கள் அணிக்காக கேப்டனாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளனர். அதேநேரத்தில், கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. ரோஹித்தின் கேப்டன்சியின் கீழ், மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்றது. அதே சமயம், தோனியின் கேப்டன்சியின் கீழ், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் பட்டத்தை வென்றது. கம்பீர் கேப்டன்சியின் கீழ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் பட்டத்தை வென்றது.

ALSO READ: ஐபிஎல் 2026ல் மிக இளம் மற்றும் வயதான வீரர்கள் யார்? இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் என்ன?

ஒரு ஐபிஎல் சீசனில் கேப்டனாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே படைத்துள்ளார். ஷேன் வார்னே கேப்டன்சியின் கீழ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் 2008 சீசன் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு முறை கூட சாம்பியன் ஆனது கிடையாது. ஐபிஎல் 2008 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றது. தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2013 ஐபிஎல் சீசனில் 12 வெற்றிகளை பதிவு செய்தது.

கேப்டனாக ஒரு ஐபிஎல் சீசனில் பெற்ற அதிக வெற்றிகள்:

  • 13 – ஷேன் வார்னே (2008)
  • 12 – எம்.எஸ்.தோனி (2013)
  • 12 – ஜார்ஜ் பெய்லி (2014)
  • 12 – கவுதம் கம்பீர் (2012)
  • 12 – ரோஹித் சர்மா (2017)

ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான விக்கெட் கீப்பர் யார்? டாப் 5 லிஸ்ட் இதோ!

ஷ்ரேயாஸ் ஐயர் பெயரில் தனித்துவ சாதனை:

ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆவார். எம்.எஸ்.தோனியோ அல்லது ரோஹித் சர்மாவோ இந்தச் சாதனையை நிகழ்த்தவில்லை. கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் 2020-ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை முதல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் தோல்வியை சந்தித்தார். அதைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கேப்டனாக அழைத்து சென்று, சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். 2025ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் தனது கேப்டன்சி வாழ்க்கையைத் தொடங்கியபோது, ​​தனது முதல் சீசனிலேயே அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், ஆர்சிபி அணியிடம் தோல்வியை சந்தித்தார்.

 

Follow Us