AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சிஎஸ்கேவுக்கு பீல்டிங் கோச்சாக வருகிறாரா ரெய்னா..? சிஎஸ்கே கொடுத்த அப்டேட்!

CSK Fielding Coach Suresh Raina: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் ஒரு தமிழ் செய்தி சேனலுடனான உரையாடலில், இதுகுறித்து தெளிவுப்படுத்தியுள்ளார். சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கேவில் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவியுடன் தொடர்புபடுத்தும் விஷயங்களை மறுத்தார்.

IPL 2026: சிஎஸ்கேவுக்கு பீல்டிங் கோச்சாக வருகிறாரா ரெய்னா..? சிஎஸ்கே கொடுத்த அப்டேட்!
சுரேஷ் ரெய்னாImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Mar 2026 16:40 PM IST

2026 ஐபிஎல் சீசனின் தொடக்கத்திற்கு தயாராகி வருகிறது. வருகின்ற 2026 மார்ச் 30ம் தேதி கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இருப்பினும், ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, ரசிகர்கள் மத்தியில் ஒரு சில விஷயங்கள் பரவ தொடங்கியது. அதன்படி, முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா அணியின் பீல்டிங் பயிற்சியாளராக மீண்டும் அணிக்கு திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த ஊகம் சமூக ஊடகங்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் வேகமாகப் பரவியது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் இப்போது இதுகுறித்து நிலைமையை தெளிவுபடுத்தியுள்ளார்.

ALSO READ: ஐபிஎல்லில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா தோனி..? சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம்!

சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமனம்..?


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் ஒரு தமிழ் செய்தி சேனலுடனான உரையாடலில், இதுகுறித்து தெளிவுப்படுத்தியுள்ளார். சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கேவில் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவியுடன் தொடர்புபடுத்தும் விஷயங்களை மறுத்தார். அப்போது பேசிய அவர், “சுரேஷ் ரெய்னா ஃபீல்டிங் பயிற்சியாளர் அல்ல. இது ஒரு அடிப்படையற்ற வதந்தி.” என்று தெரிவித்தார்.

ALSO READ: தோனியின் அடுத்த மாஸ்டர் பிளான்.. சிஎஸ்கேவுக்கு புதிய பீல்டிங் கோச்!

ஐபிஎல் 2025 சிஎஸ்கே அணிக்கு எப்படி அமைந்தது?

ஐபிஎல் 2025ல் மோசமான செயல்பாட்டிற்கு பிறகு, ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது சிஎஸ்கே. இதையடுத்து, 45 வயதான ஜேம்ஸ் ஃபாஸ்டர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஃபாஸ்டர் முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக ஃபீல்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தலைமையிலான அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் குழுவுடன் ஜேம்ஸ் ஃபாஸ்டரும் இணைவார். துணை குழுவில் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி , பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சைமன்ஸ் , உதவி பந்துவீச்சு பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ராஜீவ் குமார் ஆகியோரும் உள்ளனர்.

Follow Us