IPL 2026: தோனியின் அடுத்த மாஸ்டர் பிளான்.. சிஎஸ்கேவுக்கு புதிய பீல்டிங் கோச்!
Chennai Super Kings: முன்னாள் இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜேம்ஸ் ஃபாஸ்டரை தங்கள் பீல்டிங் பயிற்சியாளராக சிஎஸ்கே நியமிக்க திட்டமிட்டுள்ளது. 45 வயதான ஜேம்ஸ் ஃபாஸ்டர் இங்கிலாந்து அணிக்காக 2001 மற்றும் 2009 க்கு இடையில் 7 டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பையில் (2025 T20 World Cup) மிக சிறப்பாக இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், 2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) தொடருக்கு முன்னதாக, ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணியில் மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ளது. முன்னாள் இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜேம்ஸ் ஃபாஸ்டரை தங்கள் பீல்டிங் பயிற்சியாளராக சிஎஸ்கே நியமிக்க திட்டமிட்டுள்ளது. 45 வயதான ஜேம்ஸ் ஃபாஸ்டர் இங்கிலாந்து அணிக்காக 2001 மற்றும் 2009 க்கு இடையில் 7 டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ALSO READ: சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள்.. மார்ச் 15 முதல் பயிற்சி.. ஆர்சிபி அணிக்கு 6 நிபந்தனைகள்!
விக்கெட் கீப்பிங்கில் அசத்தல்:
ஜேம்ஸ் ஃபாஸ்டர் தனது விக்கெட் கீப்பிங் திறமைக்கு பெயர் பெற்றவர். இதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் பல பிரான்சைஸ் அணிக்காக பயிற்சியாளராக இருந்து நற்பெயரைப் பெற்றுள்ளார். ஃபாஸ்டரின் நியமனம் குறித்து பேசிய சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், “நாங்கள் ஒரு ஃபீல்டிங் பயிற்சியாளரைத் தேடிக்கொண்டிருந்தோம். அவர் எங்களுடன் இணைவதை நான் எதிர்நோக்குகிறேன்” என்று தெரிவித்தார்.




ஃபாஸ்டரின் பயிற்சி அனுபவம்:
பல்வேறு டி20 லீக்குகளில் ஃபாஸ்டருக்கு மிக சிறந்த அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபாஸ்டர் இதற்கு முன்பு ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனும், ஐஎல்டி20 அணியில் டெசர்ட் வைப்பர்ஸ் அணியுடனும், தி ஹண்ட்ரட் அணியில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியுடனும், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் ஸல்மி அணியுடனும் ஃபீல்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றினார். இதன்மூலம், ஃபாஸ்டரின் அனுபவம் சிஎஸ்கேவின் ஃபீல்டிங்கை மேலும் வலுப்படுத்தக்கூடும் என்று நம்பப்படுகிறது.
ALSO READ: மார்ச் 6ல் ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடா? கிடைத்த முக்கிய தகவல்..!
சிஎஸ்கே அணியின் மற்ற பயிற்சியாளர்கள் யார்..?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ், உதவி பந்துவீச்சு பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ராஜீவ் குமார் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டுள்ளது. 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடந்த 2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இருப்பினும், இந்த முறை சஞ்சு சாம்சன் வருகை மற்றும் பல இளம் வீரர்கள் உள்ளே வந்தது வலு சேர்க்கிறது. மேலும் இந்த வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசனில் ரசிகர்கள் பழைய சூப்பர் கிங்ஸைப் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.