AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG: டாஸ் வென்ற இங்கிலாந்து.. முதலில் பேட்டிங்கில் களமிறங்கும் இந்திய அணி..!

India vs England 2nd Semi-Final: 2026 டி20 உலகக் கோப்பையின் 2வது அரையிறுதி போட்டியில் இன்று அதாவது 2025 மார்ச் 5ம் தேதி இந்தியாவும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

IND vs ENG: டாஸ் வென்ற இங்கிலாந்து.. முதலில் பேட்டிங்கில் களமிறங்கும் இந்திய அணி..!
இந்தியா - இங்கிலாந்துImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 05 Mar 2026 19:08 PM IST

2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) 2வது அரையிறுதி போட்டியில் இன்று அதாவது 2025 மார்ச் 5ம் தேதி இந்தியாவும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி (IND vs ENG) முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.

2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தியது. அந்த நேரத்தில், இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பின்னர் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போது அதை சரிசெய்ய இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இங்கிலாந்து அணியும் வலுவாக இருப்பதால், இன்றிரவு நடைபெறும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

ALSO READ: இங்கிலாந்து அணிக்கு எதிராக இது நடந்தால்.. இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்..!

வான்கடே ஸ்டேடியத்தின் பிட்ச் அறிக்கை:

மும்பையில் உள்ள வான்கடே ஆடுகளம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு நல்லது. ஆனால் இந்த முறை இந்தியா-இங்கிலாந்து அரையிறுதிப் போட்டிக்காக பிட்ச் கொஞ்சம் புல் இருக்கிறது. இருப்பினும், இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் அதிக ஸ்கோரிங் போட்டியை எதிர்பார்க்கிறார். அபிஷேக் சர்மா ஒரு வருடம் முன்பு இதே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு அற்புதமான சதம் அடித்தார். இந்த போட்டியில் அபிஷேக் சிறப்பாக செயல்பட்டால், இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் சிக்கலில் சிக்குவார்கள்.

போட்டியை எங்கு காணலாம்..?

இந்தியா-இங்கிலாந்து அரையிறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரடியாகப் பார்க்கலாம். மொபைலில் போட்டியைப் பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் ஜியோஸ்டார் ஆப்பில் போட்டியைப் பார்க்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் வர்ணனைகளை அனுபவிக்கலாம்.

இந்திய அணியின் பிளேயிங் லெவன்:


அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.

ALSO READ: வெற்றியை தீர்மானிக்கும் டாஸ்..! இந்திய அணிக்கு டாஸ் ஏன் முக்கியம்?

இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்:

பில் சால்ட், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஹாரி புரூக் (கேப்டன்), டாம் பான்டன், ஜேக்கப் பெதெல், சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித்.

Follow Us