IND vs ENG Semi Final: வெற்றியை தீர்மானிக்கும் டாஸ்..! இந்திய அணிக்கு டாஸ் ஏன் முக்கியம்?
IND vs ENG Semi Final Toss: 2016ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 3 நாக் அவுட் போட்டிகளிலும், டாஸ் வென்ற அணி வெற்றி பெற்றது. இது தற்போது 2026 டி20 உலகக் கோப்பையிலும் தொடர்வதாக தெரிகிறது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்து டாஸ் வென்று, முதலில் பந்து வீசத் தேர்ந்தெடுத்து, தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
டி20 உலகக் கோப்பை 2026ன் (2026 T20 World Cup) 2வது அரையிறுதிப் போட்டி இன்று அதாவது 2026 மார்ச் 5ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும். இதில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை (IND vs ENG) எதிர்கொள்கிறது. இரு அணிகளும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், தங்கள் 3வது டி20 பட்டத்தை வெல்ல கடினமாக போராடும். இரு அணிகளுக்கு இடையிலான 2வது அரையிறுதி போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். ஐசிசி டி20 உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டிகளில் எப்போது ஒரு முக்கியமான விஷயம் கவனிக்கப்படுகிறது. இதுதான் போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ALSO READ: இந்தியா – இங்கிலாந்து நேருக்கு நேரில் யார் ஆதிக்கம்? இரு அணிகளும் நாக் அவுட்டில் எப்படி?
டாஸ் வெற்றி தோல்வியை தீர்மானிக்குமா?
இந்தியாவில் டி20 உலகக் கோப்பையை நடத்துவது இது இரண்டாவது முறையாகும். முந்தைய டி20 உலகக் கோப்பை 2016ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது. இந்த நேரத்தின்போது, டாஸ் வென்ற அணி ஒவ்வொரு நாக் அவுட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. 2016 டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில், இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்து, நியூசிலாந்தை வீழ்த்தியது. பின்னர், இரண்டாவது அரையிறுதியில், வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று, முதலில் பந்து வீசத் தேர்ந்தெடுத்து, இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இறுதிப் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் டாஸ் வென்று இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பட்டத்தை வென்றன.




இதனால், 2016ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 3 நாக் அவுட் போட்டிகளிலும், டாஸ் வென்ற அணி வெற்றி பெற்றது. இது தற்போது 2026 டி20 உலகக் கோப்பையிலும் தொடர்வதாக தெரிகிறது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்து டாஸ் வென்று, முதலில் பந்து வீசத் தேர்ந்தெடுத்து, தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வான்கடே ஸ்டேடியம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றதாக இருக்கும், ஆனால் மாலை நேரப் போட்டிகளில் பனியும் ஒரு காரணியாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்ந்தெடுப்பது நன்மை பயக்கும்.
ALSO READ: நீக்கப்படும் அபிஷேக் சர்மா..? இங்கிலாந்துக்கு எதிராக மாற்றம்! இந்திய பிளேயிங் லெவன் எப்படி?
2014 முதல் ஒவ்வொரு நாக் அவுட் போட்டியிலும் டாஸ் ஏன் முக்கியம்..?
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இன்றைய அரையிறுதிப் போட்டி இரவு நேரப் போட்டி என்பதால், டாஸ் இன்னும் முக்கியமானது. 2014 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, அனைத்து நாக் அவுட் போட்டிகளும் இரவில் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அந்த எல்லா போட்டிகளிலும் முதலில் பந்துவீசும் அணியே வென்றுள்ளது. இதற்கிடையில், 2014 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு நடந்த நாக் அவுட் போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணி 2 முறை மட்டுமே வென்றுள்ளது. மேலும் அந்த இரண்டு போட்டிகளும் பகலில் நடைபெற்றன.