AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG Semi Final: நீக்கப்படும் அபிஷேக் சர்மா..? இங்கிலாந்துக்கு எதிராக மாற்றம்! இந்திய பிளேயிங் லெவன் எப்படி?

IND vs ENG Playing 11: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு, சர்வதேச டி20 போட்டிகளில் தனது பேட்டிங்கால் அலறவிட்ட அபிஷேக் சர்மா, தற்போது தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குரூப் ஸ்டேஜில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் டக்-அவுட்டான அபிஷேக் சர்மா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 11 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

IND vs ENG Semi Final: நீக்கப்படும் அபிஷேக் சர்மா..? இங்கிலாந்துக்கு எதிராக மாற்றம்! இந்திய பிளேயிங் லெவன் எப்படி?
இந்தியா - இங்கிலாந்துImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Mar 2026 08:00 AM IST

2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) 2வது இறுதி போட்டியாளரை நிர்ணயிக்கும் 2வது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை (IND vs ENG) எதிர்கொள்ளும். இந்தப் போட்டியானது இன்று அதாவது 2026 மார்ச் 5ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும். இந்தப் போட்டி இந்திய நேரப்படி, மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 7:00 மணிக்கு தொடங்கும். இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக, 2026 டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அபிஷேக் சர்மா நீக்கப்படுவாரா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதன்படி, அரையிறுதிக்கான இந்திய பிளேயிங் லெவன் அணியில் ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ALSO READ: அரையிறுதியில் மோதும் இந்தியா – இங்கிலாந்து.. வில்லனாகுமா மழை? மும்பை வானிலை நிலவரம்!

2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு, சர்வதேச டி20 போட்டிகளில் தனது பேட்டிங்கால் அலறவிட்ட அபிஷேக் சர்மா, தற்போது தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குரூப் ஸ்டேஜில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் டக்-அவுட்டான அபிஷேக் சர்மா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 11 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனை தொடர்ந்து, அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அபிஷேக் சர்மா டி20 உலகக் கோப்பையில் இதுவரை 6 போட்டிகளில் 13.33 சராசரியுடன் 80 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அவரது அதிகபட்ச ஸ்கோர் 55 ஆகும்.

ரிங்குவுக்கு மீண்டும் வாய்ப்பா?

அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா ஒருவேளை நீக்கப்பட்டால், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் இன்னிங்ஸைத் தொடங்கலாம். ரிங்கு சிங் மீண்டும் ஃபினிஷராக களமிறங்கலாம். இருப்பினும், இது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி, எந்த மாற்றங்களும் இல்லாமல் களமிறங்குவதே முக்கியமானது.

இந்தியாவின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்:

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.

இங்கிலாந்தின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்:

பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஹாரி புரூக் (கேப்டன்), ஜேக்கப் பெதெல், டாம் பான்டன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித்.

ALSO READ: பாபர் அசாம் வேண்டாம்! புதிய வீரர்களை களமிறக்கிய பாகிஸ்தான்.. வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் அணி அறிவிப்பு!

மும்பை ஸ்டேடியம் இந்திய அணிக்கு ராசியானதா?

மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியம் இந்திய அணிக்கு ராசியானதாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றியும், 2ல் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதுமட்டுமின்றி, இதே ஸ்டேடியத்தில், இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 247 ரன்கள் குவித்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

Follow Us