Pakistan Cricket Team: பாபர் அசாம் வேண்டாம்! புதிய வீரர்களை களமிறக்கிய பாகிஸ்தான்.. வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் அணி அறிவிப்பு!
Pakistan ODI Squad for Bangladesh Tour: 2026 டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து பாகிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அதாவது 2026 மார்ச் 4ம் தேதி அறிவித்தது.
2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) மட்டுமின்றி, ஆசியக் கோப்பை, சாம்பியன் டிராபி உள்ளிட்ட பல்வேறு முக்கிய போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படவில்லை. 2026 டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றைக் கடந்து சூப்பர் 8 சுற்றை எட்டிய பாகிஸ்தான் அணியால், அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற முடியவில்லை. எனவே, பாகிஸ்தான் அணியின் (Pakistan Cricket Team) மோசமான செயல்பாட்டால் கவலையடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சமீபத்தில் வீரர்களுக்கு அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்த அலீம் தார் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். மேலும், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் மீது பிசிபி ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்துள்ளது. காரணம் டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் மோசமாக செயல்பட்டார். முன்னதாக, டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பிளேயிங் லெவனில் வெளியேற்றப்பட்ட பாபர் அசாம், தற்போது ஒருநாள் அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
ALSO READ: அரையிறுதியில் மோதும் இந்தியா – இங்கிலாந்து.. வில்லனாகுமா மழை? மும்பை வானிலை நிலவரம்!
ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்ட பாபர் அசாம்:
2026 டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து பாகிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அதாவது 2026 மார்ச் 4ம் தேதி அறிவித்தது. பாகிஸ்தான் – வங்கதேசம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடர் வருகின்ற 2026 மார்ச் 11, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் டாக்காவில் உள்ள ஷெர்-இ-பங்களா தேசிய ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தான் அணியில் பெரிய மாற்றங்களுடன் பல மூத்த வீரர்கள் நீக்கப்பட்டு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தற்போது மோசமான ஃபார்மில் போராடி வரும் பாபர் அசாம் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.




பாபர் அசாமுடன், சாம் அயூப், முகமது நவாஸ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இந்தத் தொடரில் இடம் பெறவில்லை. டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறாத ஹாரிஸ் ரவூப், ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், பைசல் அக்ரம், முகமது ரிஸ்வான் போன்ற அனுபவ வீரர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.மறுபுறம், ஒருநாள் அணியின் கேப்டனாக ஷாஹீன் ஷா அப்ரிடி தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: மார்ச் 6ல் ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடா? கிடைத்த முக்கிய தகவல்..!
பாகிஸ்தான் அணி:
ஷாஹீன் ஷா அப்ரிடி (கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், பைசல் அக்ரம், ஹாரிஸ் ரவூப், ஹுசைன் தலாத், மாஸ் சதகத், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது வாசிம் ஜூனியர், முகமது காசி கோரி, சாஹிப்ஹான் கோரி, சாஹிப்ஹான் கோரி சல்மான் அலி ஆகா மற்றும் ஷமில் ஹுசைன்.