IND vs ENG Semi Final: இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி.. வான்கடேவில் இந்திய அணியின் செயல்திறன் எப்படி?
Wankhede Stadium Records: இந்தியா - இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் 2 முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளன. எனவே, இந்த அரையிறுதியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி வெற்றி பெறும். இரு அணிகளும் இதற்கு முன்பு டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) திருவிழா இன்னும் ஒரு சில தினங்களில் முடிவடையவுள்ளது. இன்று அதாவது 2026 மார்ச் 4ம் தேதி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து, நாளை அதாவது 2026 மார்ச் 5ம் தேதி மும்பையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வான்கடே ஸ்டேடியத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் (IND vs ENG) மோதுகின்றன. இந்த அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் களமிறங்கும். இந்தநிலையில் போட்டிக்கு முன், வான்கடே ஸ்டேடியம் இந்திய அணி சாதகமானதா உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வோம்.
வான்கடேவில் இந்தியாவின் டி20 சாதனை:
வான்கடே ஸ்டேடியத்தில் இந்திய அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பல்வேறு சாதனையைப் படைத்துள்ளது. இங்கு இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளில், இந்தியா 5 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியடைந்துள்ளது. இந்த ஸ்டேடியத்தில்தான் இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக 247 ரன்கள் குவித்தது. இது இந்த ஸ்டேடியத்தில் படைக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ரன்கள் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியும் இந்த ஸ்டேடியத்தில்தான். அதுவும் இங்கிலாந்துக்கு எதிராகவே கிடைத்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ALSO READ: T20 அரையிறுதியில் மழை வந்தால் என்னாகும்? ரிசர்வ் நாள், கூடுதல் நேரம் விதிகள் இவைதான்!




பேட்டிங் சாதனைகள்
அதிக ரன்கள்:
விராட் கோலி 3 போட்டிகளில் 197 ரன்கள் எடுத்து 197 சராசரியைப் பெற்றுள்ளார்.
சிறந்த இன்னிங்ஸ்:
இங்கிலாந்துக்கு எதிராக அபிஷேக் சர்மா வெறும் 54 பந்துகளில் 13 சிக்ஸர்களுடன் 135 ரன்கள் விளாசினார்.
அதிக சதங்கள்:
அபிஷேக் சர்மா (2 போட்டிகளில் 1 சதம்)
அதிக அரைசதங்கள்:
விராட் கோலி (3 போட்டிகளில் 2 அரைசதங்கள்)
அதிக சிக்ஸர்கள்:
அபிஷேக் சர்மா (13 சிக்ஸர்கள்)
அதிகபட்ச பார்ட்னர்ஷிப்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கே.எல். ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இடையே முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுக்கப்பட்டது.
கேப்டன்சி:
சூர்யகுமார் யாதவ் தலைமையில் இங்கு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
அதிக விக்கெட்டுகள்:
முகமது ஷமி – (2 போட்டிகளில் 5 விக்கெட்டுகள்)
சிறந்த செயல்திறன்:
இலங்கைக்கு எதிராக ஷிவம் மாவி 4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ALSO READ: தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அரையிறுதிக்கு மழை அச்சுறுத்தலா? முக்கிய முடிவை எடுத்துள்ள ஐசிசி!
இந்தியா-இங்கிலாந்து அரையிறுதி வரலாறு:
இந்தியா – இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் 2 முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளன. எனவே, இந்த அரையிறுதியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி வெற்றி பெறும். இரு அணிகளும் இதற்கு முன்பு டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து அணி 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை தோற்கடித்தது. அதன்பிறகு, 2024 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை இந்திய அணி பழி தீர்த்தது. இப்போது, 2026 டி20 உலகக் கோப்பையில் எந்த அணி வெற்றிபெறும் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.