AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ICC T20 Rankings: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான சிறப்பான ஆட்டம்.. ஐசிசி டி20 தரவரிசையில் எகிறிய சஞ்சு சாம்சன்!

Sanju Samson ICC T20 Rankings: 2026 டி20 உலகக் கோப்பைக்கு மத்தியில், ஐசிசி சமீபத்திய டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில், இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல உதவிய சாம்சன் உள்பட பல இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதுமட்டுமின்றி இஷான் கிஷன், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் தங்கள் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Mar 2026 18:56 PM IST
2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதி 2026 மார்ச் 4ம் தேதியான இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில், ஐசிசி புதிய டி20 தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றின் இறுதிப் போட்டியில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடிய சஞ்சு சாம்சன் 25 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.

1 / 5
டி20 உலகக் கோப்பை முழுவதும் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வந்த திலக் வர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோரும் புதிய தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தங்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

2 / 5
முன்னதாக, ஐசிசி டி20 தரவரிசையில் 65வது இடத்தில் இருந்த சஞ்சு சாம்சன், தற்போது 549 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 25 இடங்கள் முன்னேறி 40வது இடத்தைப் பிடித்துள்ளார். இவருடன் மற்றொரு அதிரடி பேட்ஸ்மேனான இஷான் கிஷனும் டாப் 10 வரிசையில் 5வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

3 / 5
அதேபோல், திலக் வர்மாவும் 7வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு ஒரு இடம் முன்னேறியுள்ளார். இருப்பினும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் பின்னடைவை சந்தித்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளார். 2026 டி20 உலகக் கோப்பையில் இதுவரை ஒரு அரைசதத்தை மட்டுமே கடந்து 3 முறை டக் அவுட்டாகிய போதிலும், அபிஷேக் சர்மா தொடர்ந்து ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

4 / 5
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா 8வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு ஒரு இடம் முன்னேறினார். பவர் பிளேவில் விக்கெட்டை சொல்லி வைத்து தூக்கும் அர்ஷ்தீப் சிங் 6 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்தார். இதற்கிடையில் வருண் சக்ரவர்த்தி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

5 / 5
Follow Us