AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sai Abhyankkar: என் வாழ்க்கையில் நான் இழந்த மிகப்பெரிய பகுதி.. முதல்வர் விஜய் குறித்து எமோஷனலாக பேசிய சாய் அபயங்கர்!

Sai Abhyankkar on Missing Vijay Film Collab: தென்னிந்திய சினிமாவில் தற்போது ட்ரெண்டிங் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் சாய் அபயங்கர். இவர் அண்மையில் தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சி ஒன்றும் கலந்துகொண்ட நிலையில், அதில் முதல்வர் விஜய்யுடன் படங்களில் பணியாற்றமுடியாமல் போனது பற்றி எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Sai Abhyankkar: என் வாழ்க்கையில் நான் இழந்த மிகப்பெரிய பகுதி.. முதல்வர் விஜய் குறித்து எமோஷனலாக பேசிய சாய் அபயங்கர்!
சாய் அபயங்கர் மற்றும் முதல்வர் விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Aug 2026 21:29 PM IST

தனது இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்துவரும் மாஸ் இசையமைப்பாளராக இருப்பவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). இவரின் இசையில் இதுவரை குறைவான படங்களே வெளியான நிலையில், அவருக்கு பெரியளவில் வரவேற்பு இருக்கிறது. இவரின் இசையில் தமிழில் முதல் படமாக வெளியானது டியூட் (Dude). ஆனால் இவரை இசையமைப்பாளராக முதல் முதலில் அறிமுகம் செய்தவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj), அவர் தனது தயாரிப்பில் உருவாகிவரும் பென்ஸ் (Benz) படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். ஆனால் முதல் ரிலீஸ் படமாக டியூட் அமைந்தது. இந்த படத்தில் இவரின் இசையானது சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் தி ஒன் சூர்யாவின் (Suriya) கருப்பு (Karuppu) படத்திலும் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இவர் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது.

இந்த பாடல்கள் இவருக்கு மேலும் பெரியளவில் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் தற்போது அல்லு அர்ஜுன் முதல் சூர்யா போன்ற பல்வேறு நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துவருகிறார். சமீபத்தில் தனியார் செய்தி நிறுவன நேர்காணல் ஒன்றில் பேசிய சாய் அபயங்கர், அதில் முதலமைச்சர் விஜய்யுடன் பணியாற்றமுடியாமல் போனது குறித்து எமோஷனலாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அனிருத் – காவியா மாறனின் திருமண தேதி எப்போது தெரியுமா? – வைரலாகும் பதிவு!

முதல்வர் விஜய்யுடன் படங்களில் பணியாற்றமுடியாமல் போனது குறித்து பேசிய சாய் அபயங்கர்:

அந்த நேர்காணலில் பேசிய சாய் அபயங்கர், “தயவுசெய்து என்னை உணர்ச்சிவசப்பட வைக்காதீர்கள். என் வாழ்க்கையில் நான் இழக்கப்போகும் மிகப்பெரிய பகுதி அதுதான் என்று நினைக்கிறேன். இனி அது சாத்தியமில்லை. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.. நான் அவருக்கு 16 பாடல்கள் கொண்ட ஒரு ஆல்பத்தைக் கொடுத்திருப்பேன். அதை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். முன்பு அவர் சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஹீரோவாக இருந்தார். இப்போது அவர் ஒருமனதாக அனைவருக்கும் ஹீரோவாக இருக்கிறார். மனமார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்” என அதில் அவர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: மலையாள சினிமாவில் ரசிகர்களும் பிரபலங்களும் கொண்டாடிய பாலன் தி பாய் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ

முதல்வர் விஜய்யுடன் படங்களில் பணியாற்றமுடியாமல் போனது குறித்து சாய் அபயங்கர் பேசியது குறித்த வீடியோ பதிவு:

இவர் தற்போது அல்லு அர்ஜுன், கார்த்தி, சிலம்பரசன், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் இன்னும் முதலமைச்சர் விஜய்யுடன் எந்த படங்களிலும் பணியாற்றவில்லை.

Follow Us