AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026 Final: டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டி எப்போது, ​​எங்கு நடைபெறும்? முழு விவரம் இதோ!

T20 World Cup 2026 Final Date: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் . அதன் பெரிய கெபாசிட்டி மற்றும் பிரமாண்டத்திற்கு பெயர் பெற்ற இந்த இறுதிப் போட்டி இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்குத் தொடங்கும்.

T20 World Cup 2026 Final: டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டி எப்போது, ​​எங்கு நடைபெறும்? முழு விவரம் இதோ!
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Mar 2026 15:55 PM IST

ஐசிசியின் மிகவும் உற்சாகமான போட்டியான 2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக, நேற்று அதாவது 2026 மார்ச் 4ம் தேதி நடைபெற்ற தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதற்கிடையில், இந்தியா – இங்கிலாந்து (IND vs ENG) இடையிலான 2வது அரையிறுதி போட்டியில் இன்று அதாவது 2026 மார்ச் 5ம் தேதி நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அந்த இறுதிப்போட்டி முன்னேறும். இந்த இறுதிப் போட்டியானது 2026 மார்ச் 8ம் தேதி நடைபெறுகிறது. உலகின் புதிய டி20 உலக சாம்பியனைத் தீர்மானிக்கும் இந்த பெரிய போட்டிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ALSO READ: சஞ்சு சாம்சன் vs ஜோஃப்ரா ஆர்ச்சர் – போட்டியின் முடிவை தீர்மானிக்கப்போவது யார்?

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து:

முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நியூசிலாந்து வெறும் 12.5 ஓவர்களில் போட்டியை வென்று அனைவரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியப்படுத்தியது. நியூசிலாந்து இப்போது இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெறும் அணியை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும். இந்த போட்டி இன்று அதாவது 2026 மார்ச் 5ம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும். எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி நேரடியாக இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.

இறுதிப்போட்டி எங்கு நடைபெறுகிறது..?

2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் . அதன் பெரிய கெபாசிட்டி மற்றும் பிரமாண்டத்திற்கு பெயர் பெற்ற இந்த இறுதிப் போட்டி இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்குத் தொடங்கும். அதற்கு முன்னதாக, டாஸ் மாலை 6:30 மணியளவில் போடப்படும். இந்த அகமதாபாத் ஸ்டேடியத்தில் இதற்கு முன்பு, 2023 ஒருநாள் உலகக் கோப்பை உள்பட பல முக்கிய சர்வதேச போட்டிகளை நடத்தியது. இப்போது டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நடத்தும்.

நேரடி போட்டியை எங்கே பார்ப்பது?

2026 டி20 உலகக் கோப்பை போட்டியை டிவி மற்றும் மொபைல் இரண்டிலும் பார்க்கலாம். இறுதிப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையத்தளம் வழியாக டிஜிட்டல் தளங்களிலும் நேரடியாக பார்க்கலாம்.

ALSO READ: இந்தியா – இங்கிலாந்து நேருக்கு நேரில் யார் ஆதிக்கம்? இரு அணிகளும் நாக் அவுட்டில் எப்படி?

இறுதிப் போட்டியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு:

நியூசிலாந்து ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில்,  இந்தியாவும் இங்கிலாந்தும் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும். இந்த போட்டிதான் அடுத்த இறுதிப்போட்டியாளரை தேர்வு செய்யும். வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை 2026ல் சாம்பியன் பட்டத்தை எந்த அணி வெல்லும் என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

Follow Us