AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IndvsEng: சஞ்சு சாம்சன் vs ஜோஃப்ரா ஆர்ச்சர் – போட்டியின் முடிவை தீர்மானிக்கப்போவது யார்?

Ind vs Eng : டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த முக்கியமான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மற்றும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடையிலான மோதலாக இருக்கும் என கூறப்படுகிறது.

Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Mar 2026 13:15 PM IST
இந்த போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர், சஞ்சு சாம்சனை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவர் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

1 / 5
இதுவரை ஆர்ச்சரின் 23 பந்துகளை எதிர்கொண்டுள்ள சஞ்சு சாம்சன் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் 3 முறை அவுட்டாகியுள்ளார்.  இதனால் அரையிறுதி போட்டியில் ஆர்ச்சரை சஞ்சு சாம்சன் எப்படி சமாளிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2 / 5
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதே நேரம் இஷான் கிஷனும் தொடக்க இடத்தில் விளையாட முடியாத சூழல் உள்ளது. இதனால் சஞ்சு சாம்சன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

3 / 5
சமீபத்தில் சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இதனால் இந்திய அணி அரையிறுத்திக்கு முன்னேறியது.

4 / 5
இங்கிலாந்தை பொறுத்தவரை தொடக்கத்தில் தடுமாற்றங்களை சந்தித்தாலும் பின்னர் சரிவிலிருந்து மீண்டு சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறந்த ஃபார்மில் இருக்கிறார்கள். இதனால் இன்றைய போட்டி மிக கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

5 / 5
Follow Us