AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG Semi Final: இங்கிலாந்து அணிக்கு எதிராக இது நடந்தால்.. இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்..!

2026 T20 World Cup Semi Final: 2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியது. அந்த போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 2024 அரையிறுதியில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

IND vs ENG Semi Final: இங்கிலாந்து அணிக்கு எதிராக இது நடந்தால்.. இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்..!
இந்தியா - இங்கிலாந்துImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Mar 2026 18:29 PM IST

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தயாராக உள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்துடன் 2வது அரையிறுதி போட்டி இந்திய அணிக்கு (IND vs ENG) முக்கியமானது. இந்த போட்டியானது இன்று அதாவது 2026 மார்ச் 5ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியானது இன்னும் சற்று நேரத்தில் அதாவது மாலை 7 மணிக்கு தொடங்கும். டாஸ் மாலை 6:30 மணிக்கு நடைபெறும். 2026 மார்ச் 4ம் தேதியான நேற்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இப்போது நியூசிலாந்திற்கு எதிராக யார் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள் என்பது இந்தியா vs இங்கிலாந்து போட்டியின் முடிவு வந்த பின்னரே இது தெளிவாகும்.

இந்தியா vs இங்கிலாந்து போட்டி தொடர்பாக பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும், இந்த போட்டியின் போது ஒரு தற்செயல் நிகழ்வு காணப்பட்டது. இதன் காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியமாக போட்டியை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

ALSO READ: வெற்றியை தீர்மானிக்கும் டாஸ்..! இந்திய அணிக்கு டாஸ் ஏன் முக்கியம்?

3வது முறையாக அரையிறுதியில் மோதல்:

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதுவது இது தொடர்ச்சியாக 3வது முறையாகும். டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இரு அணிகளும் இதுவரை தலா ஒரு முறை வென்றுள்ளன. மேலும், இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்திய போதெல்லாம், இந்தியா உலகக் கோப்பை கோப்பையை வென்றுள்ளது. எனவே, இந்த 2026ம் ஆண்டும் இந்திய அனி இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பையை வெல்லும் என ஒவ்வொரு இந்திய ரசிகரும் நம்புகிறார்கள்.

2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியது. அந்த போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 2024 அரையிறுதியில் இங்கிலாந்தை தோற்கடித்தது. பின்னர், இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2007க்குப் பிறகு முதல் முறையாக டி20 உலகக் கோப்பை கோப்பையை வென்றது.

1983 இல் என்ன நடந்தது?

1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்திய அணி முதல் உலகக் கோப்பை வெற்றியைப் பெற்றது. அப்போதும் கூட, அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்தை தோற்கடித்தது. அந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பின்னர், வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது.

ALSO READ: டி20 உலகக் கோப்பை நாக் அவுட்டில் அதிக ரன்கள்.. அதிக இடங்களை பிடித்து கோலி ஆதிக்கம்!

1987 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் தோல்வி:

1987 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் அப்போதைய நடப்பு சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் தோற்றது. எனவே, ​​இந்திய அணி இங்கிலாந்தை தோற்கடித்த போதெல்லாம், இந்தியா உலகக் கோப்பையை வென்றுள்ளது. எனவே இந்த ஆண்டு என்ன நடக்கும்? இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியின் முடிவு வந்த பின்னரே இது தெரிய வரும்.

Follow Us