AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

CSK Jersey 2026: மங்களகரமாக மஞ்சள்..! ஐபிஎல் 2026 சீசனுக்கான புதிய ஜெர்சியை வெளியிட்ட சிஎஸ்கே!

Chennai Super Kings Launch New Jersey: கடந்த ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 10 தோல்விகள் மற்றும் 4 வெற்றிகளுடன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. 2026 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.

CSK Jersey 2026: மங்களகரமாக மஞ்சள்..! ஐபிஎல் 2026 சீசனுக்கான புதிய ஜெர்சியை வெளியிட்ட சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Mar 2026 18:13 PM IST

2026 ஐபிஎல் (IPL 2026) சீசனுக்கான பயிற்சி முகாமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கியுள்ளது. இந்த சீசனிலும் விளையாடுவாரா என்ற கேள்விக்கு மத்தியில் 44 வயதான மகேந்திர சிங் தோனி, சென்னை சேப்பாக்கத்தில் களமிறங்கிவிட்டார். 2025 ஐபிஎல் சீசனுக்கு பிறகு, எம்.எஸ்.தோனி (M.S.Dhoni) 2026 ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது புதிய ஜெர்சியை வெளியிட்டது. அதன் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சீசனுக்கு முன்னதாக சிஎஸ்கே முகாமுக்கு எம்.எஸ்.தோனி வந்ததை இந்த வீடியோ உறுதிப்படுத்தியது.

ALSO READ: ஐபிஎல் 2026 தொடக்க தேதி மாற்றம்..? தமிழ்நாடு காரணமா? பிசிசிஐ முக்கிய முடிவு!

புதிய ஜெர்ஸி:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2026க்கான புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது. 5 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் லீக்கின் ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக தங்கள் புதிய ஜெர்சியின் முன்னோட்டத்தை வெளியிட்டது. வலது நெஞ்சு பகுதிகளில் இடம்பெற்றுள்ள சிஎஸ்கே சின்னத்தின் அதற்கு மேலே 5 நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 10 தோல்விகள் மற்றும் 4 வெற்றிகளுடன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. 2026 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை ட்ரேடு செய்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை விட்டு கொடுத்தது. இதுமட்டுமின்றி, உள்நாட்டு இளம் வீரர்களான பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோரையும் சிஎஸ்கே அணியில் சேர்த்துள்ளது.

ALSO READ: மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம்! இந்தியா வர தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. பிசிசிஐ முடிவு என்ன?

கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக தொடர்ந்து செயல்படுவார். சிஎஸ்கே அணியின் உறுப்பினர்களான சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே இருவரும் தற்போது இந்திய அணியில் இடம்பெற்று டி20 உலகக் கோப்பையில் விளையாடி வருகின்றனர். லீக் தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே தயாராகும் நிலையில் உள்ளது. தொடர்ந்து, எம்.எஸ்.தோனியும் அணியில் இடம்பெறுவதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பலம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Follow Us