AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரோகித் சர்மா – தோனி ரன் வேட்டை: தென்னாப்பிரிக்காவை காலி செய்த இந்தியா – 2007 உலகக்கோப்பை நியாபகம் இருக்கா?

T20 World Cup 2007 Throwback : கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பை போட்டியில் குரூப் சுற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. அதுவரை தோல்வியை சந்திக்காமல் விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

ரோகித் சர்மா –  தோனி ரன் வேட்டை: தென்னாப்பிரிக்காவை காலி செய்த இந்தியா – 2007 உலகக்கோப்பை நியாபகம் இருக்கா?
ரோகித் சர்மா - எம்.எஸ்.தோனி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 21 Feb 2026 16:35 PM IST

டி20 உலகக்கோப்பை (T20 World Cup) போட்டிகள் கடந்த பிப்ரவரி 7, 2026 அன்றுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்று வெற்றிகரமாக சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வென்ற தருணத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இன்றளவும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் அந்த தருணம் அழியாத நினைவுகளாக இருந்து வருகிறது. அது நடந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகளான நிலையயிலும் தோனி தலைமையிலான இந்திய அணியின் வெற்றியை பலரும் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

2007 உலகக்கபோப்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பை போட்டியில் குரூப் சுற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் மைதானத்தில் நடைபெற்றது. அதுவரை தோல்வியை சந்திக்காமல் விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 153 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா 40 பந்துகளில் அதிரடியான அரைசதம் அடித்து அசத்தினார். மேலும் அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி 33 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து அணிக்கு வலுவான ஸ்கோரை அடிக்க உதவினார்.

இதையும் படிக்க : IndvsSA : இந்தியாவுக்கு எய்டன் மார்க்ரமால் காத்திருக்கும் சவால் – என்ன காரணம் தெரியுமா?

அரையிறுதி வாய்ப்பை இழந்த தென்னாப்பிரிக்கா

இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறப்பாக அந்த அணியின் மார்க் பவுச்சர் மற்றும் ஆல்பி மோர்கல் ஆகியோர் அணியை மீட்க போராடினாலும் அவர்கள் முயற்சி கைகொடுக்கவில்லை. இதனையடுத்து இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் தென்னாப்பிரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

இதையும் படிக்க :  IND vs SA T20I series: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 போட்டிகளில் வெற்றி நிலவரம்..

இது இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பை வெல்ல பெரிதும் உதவியது. இறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான், 2007 உலகக்கோப்பையை வென்ற நாள், என் கனவு நனவான நாள். டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை தொடர்ந்து வீழ்த்திய பயணம் அப்போது தான் முதன்முறையாக தொடங்கியது என்றார். அந்த போட்டியில் பங்கேற்ற ராபின் உத்தப்பா, செப்டம்பர் 24, 2007 என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத நாள். அந்த அணியின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு பெருமை ென்றார். மேலும் இது தொடர்பாக இந்திய அணி கோப்பை வென்ற தருணங்களை பகிர்ந்த யுவராஜ் சிங், சில நினைவுகள் ஒருபோதும் மறையாது. நாட்டை ஒன்றிணை்த பெருமை மிகு தருணம் என்றார்.