AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த 2026 உலகக்கோப்பையின் ஸ்டாராக மாறிய ஷிவம் துபே – எப்படி தெரியுமா?

Shivam Dube : 2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய வீரர் யார் என்ற கேள்விக்கு ஆரம்பத்தில் அபிஷேக் சர்மா என பலரும் தெரிவித்தனர். ஆனால் அவர் மூன்று போட்டிகளில் தொடர்ந்து ‘டக்’ அடித்து ஏமாற்றமளித்தார். தற்போது நம்பிக்கைக்குரிய வீரராக சிவம் துபே மாறியுள்ளார்.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 19 Feb 2026 21:59 PM IST
முன்னர் துபே பெரும்பாலும் சிக்ஸர்கள் அடிக்கும் பவர் ஹிட்டராக மட்டுமே பார்க்கப்பட்டார். ஆனால் இந்த உலகக்கோப்பையில் அவர் ஒரு முழுமையான ஆல் ரவுண்டராக மாறியிருக்கிறார்.

முன்னர் துபே பெரும்பாலும் சிக்ஸர்கள் அடிக்கும் பவர் ஹிட்டராக மட்டுமே பார்க்கப்பட்டார். ஆனால் இந்த உலகக்கோப்பையில் அவர் ஒரு முழுமையான ஆல் ரவுண்டராக மாறியிருக்கிறார்.

1 / 5
நமீபியா மற்றும் பாகிஸ்தான் எதிரான போட்டிகளில் இக்கட்டான நிலையில் முக்கிய ரன்கள் எடுத்த துபே, நெதர்லாந்து எதிரான போட்டியில் ரசிகர்களை ஆபத்பாண்டவனாக மாறினார்.  அந்த போட்டியில் இந்தியா 69/3 என்ற மோசமான நிலையில் இருந்தபோது துபே களமிறங்கினார்.  ஆரம்பத்தில் 11 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் பின்னர் கியரை மாற்றிய அவர் அடுத்த 20 பந்துகளில் 60 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு காரணமானார்.

2 / 5
அந்த இன்னிங்ஸில் ஆறு சிக்ஸர்களும் அடங்கும். குறிப்பாக லோகன் வான் பீன் பந்துவீச்சை சிறப்பாக கையாண்டு அவர் அடித்த சிக்சர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

அந்த இன்னிங்ஸில் ஆறு சிக்ஸர்களும் அடங்கும். குறிப்பாக லோகன் வான் பீன் பந்துவீச்சை சிறப்பாக கையாண்டு அவர் அடித்த சிக்சர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

3 / 5
துபேவின் மிகப்பெரிய மாற்றமாக ஷார்ட் பந்துகளை சமாளிக்கும் திறனில் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணமாக அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அனுபவத்தை கூறியுள்ளார்.
முந்தைய சீசனில் நான் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக சிரமப்பட்டேன். ஆனால் அதற்காக கடினமாக உழைத்தேன் என துபே தெரிவித்துள்ளார்.

துபேவின் மிகப்பெரிய மாற்றமாக ஷார்ட் பந்துகளை சமாளிக்கும் திறனில் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணமாக அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அனுபவத்தை கூறியுள்ளார். முந்தைய சீசனில் நான் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக சிரமப்பட்டேன். ஆனால் அதற்காக கடினமாக உழைத்தேன் என துபே தெரிவித்துள்ளார்.

4 / 5
பேட்டிங்கில் மட்டுமல்ல, பந்துவீச்சிலும் துபே முன்னேற்றம் கண்டுள்ளார். நெதர்லாந்து போட்டியில் கடைசி ஓவரில் 28 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பும்ராவுக்கு பதிலாக துபேவையே நம்பினார். அந்த நம்பிக்கையை துபே வெற்றியாக செய்து முடித்தார்.

5 / 5