IndvsSA : இந்தியாவுக்கு எய்டன் மார்க்ரமால் காத்திருக்கும் சவால் – என்ன காரணம் தெரியுமா?
T20 World Cup 2026: டி20 உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்காவின் கேப்டன் எய்டன் மார்க்ரம் மிகப்பெரிய சவாலாக அமைவார் என கூறப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
கடந்த பிப்ரவரி 7, 2026 அன்று தொடங்கிய டி20 உலகக் கோப்பை போட்டிகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டிகள் பிப்ரவரி 20, 2026 உடன் லீக் போட்டிகள் முடிவடையும் நிலையில், பிப்ரவரி 21, 2026 அன்று முதல் சூப்பர் 8 சுற்று தொடங்குகிறது. இந்த நிலையில் லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ள இந்தியா சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வருகிற பிப்ரவரி 22, 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தியாவை போலவே தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் மற்றும் குயிண்டன் டி காக் ஆகியோர் இந்தியாவுக்கு சவாலாக அமைவர் என கூறப்படுகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவுக்கு சவலாக மாறும் எய்டன் மார்க்ரம்
டி20 உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்காவின் கேப்டன் எய்டன் மார்க்ரம் மற்றும் அதிரடி தொடக்க வீரர் குயிண்டன் டி காக் ஆகியோரை எதிர்கொள்வது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிக்க : இந்த 2026 உலகக்கோப்பையின் ஸ்டாராக மாறிய ஷிவம் துபே – எப்படி தெரியுமா?
எய்டன் மார்க்ரமின் ஆட்டம் குறித்து ஐசிசியின் பதிவு
Aiden Markram’s stroke-filled fifty leads the South Africa chase 👊
It’s one of the @MarriottBonvoy Milestones of the #T20WorldCup 👏 pic.twitter.com/ziFLYFJehW
— ICC (@ICC) February 14, 2026
டி20 உலகக்கோப்பை போட்டியில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள எய்டன் மார்க்ரம் இதுவரை 178 ரன்கள் குவித்துள்ளார். மேலும் இந்த டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளார். மேலும் 5வது இடத்தில் 176 ரன்களுடன் இந்தியாவின் இஷான் கிஷன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : IndvsSA : 2024 உலகக்கோப்பை ஃபைனல் நியாபகம் இருக்கா? 11 ஆண்டு போராட்டம் – என்ன நடந்தது?
பந்து வீச்சால் ஆபத்து
எய்டன் மார்க்ரம் டி20 போட்டிகளில் ஆட்டத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவர். மேலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் திறன் அவருக்கு உள்ளது. இதனால் இந்திய அணியின் இடம் பெற்ற ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொள்ளக்கூடியவர். அழுத்தமான தருணங்களில் கூட பதற்றமின்றி விளையாடும் திறன் கொண்டுள்ளார். மேலும் இவர் ஆஃப் ஸ்பின்னரும் கூட என்பது கூடுதல் ஹைலைட். இந்தியாவின் அபிஷேக் சர்மா ஸ்பின்னர்களுக்கு எதிராக தனது விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகிறார். இதனால் இந்த போட்டியில் அபிஷேக் சர்மாவுக்கு எய்டன் மார்க்ரம் சவாலாக இருப்பார் என கூறப்படுகிறது.