IND vs SA 4th T20: இந்தியா vs தென்னாப்பிரிக்கா 4வது டி20 போட்டி.. பிட்ச் யாருக்கு சாதகம்..?
IND vs SA 4th T20 Match Prediction: இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 34 டி20 சர்வதேச போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், தென்னாப்பிரிக்கா அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு (IND vs SA 4th T20) இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4வது போட்டி இன்று அதாவது 2025 டிசம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. இரு அணிகளும் லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் மோதுகின்றன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) ஏற்கனவே 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதன்படி, இந்திய அணி 4வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில், இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தால் தென்னாப்பிரிக்கா அணி தொடரை இழக்கும். இந்தநிலையில், இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4வது டி20 பற்றிய விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இந்தியா-தென்னாப்பிரிக்கா அடுத்த மோதல் எப்போது? முழு விவரம் இதோ!




ஹெட் டூ ஹெட் விவரங்கள்:
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 34 டி20 சர்வதேச போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், தென்னாப்பிரிக்கா அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையில், ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் இடையே நடந்த கடைசி 9 டி20 போட்டிகளில் இந்திய அணி 7ல் வெற்றி பெற்றுள்ளது.
ஏகானா ஸ்டேடியத்தில் பிட்ச் அறிக்கை:
2⃣-1⃣ up in the T20I series! 👌#TeamIndia is ready to 𝙇𝙤𝙘𝙠 𝙖𝙣𝙙 𝙇𝙤𝙖𝙙 👊#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/6ZBWwvC5mD
— BCCI (@BCCI) December 17, 2025
லக்னோவில் மாலையில் குளிர் மற்றும் மூடுபனி நிறைந்த சூழல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் ஆரம்பத்தில் பனி பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த ஸ்டேடியத்தில் சமீபத்தில் நடைபெற்ற டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடிக்கப்படவில்லை. நியூ பாலில் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்விங் கிடைக்கும். ஆனால் பந்து பழையதாகிவிட்டால், சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள். எனவே, லக்னோவில் மீண்டும் ஒரு குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியை காணலாம்.
4வது டி20 போட்டிக்கான கணிக்கப்பட்ட இந்திய அணி:
அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே/வாஷிங்டன் சுந்தர், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா
ALSO READ: ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸ்ர்கள்.. டாப் 2 பட்டியலில் ரோஹித், கோலி!
4வது டி20 போட்டிக்கான கணிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா அணி:
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரூயிஸ், டேவிட் மில்லர், டோனோவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே, மார்கோ ஜான்சென், கார்பின் போஷ், அன்ரிச் நார்ட்ஜே மற்றும் ஓட்னீல் பார்ட்மேன்.