IND VS SA 4th T20: இந்தியா-தென்னாப்பிரிக்கா அடுத்த மோதல் எப்போது? முழு விவரம் இதோ!
IND VS SA 4th T20 Live Streaming: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி நடந்த தர்மசாலாவில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி (IND VS SA 4th T20) நாளை மறுநாள் அதாவது வருகின்ற 2025 டிசம்பர் 17ம் தேதி புதன்கிழமை நடைபெறும். இந்தப் போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்தப் போட்டி இரவு 7:00 மணிக்கு தொடங்குகிறது. சுவாரஸ்யமாக, ஐபிஎல் 2026 மினி ஏலம் (IPL Auction 2026) நடைபெறவுள்ள நிலையில், ஒரு நாள் கழித்து இந்தப் போட்டி நடைபெறவுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தநிலையில், இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி பற்றிய விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.




இந்தியா தொடர் வெற்றியை பெறுமா..?
Shivam Dube with the winning runs 🥳#TeamIndia register a 7-wicket win in Dharamshala and lead the series 2⃣-1⃣
Scorecard ▶️ https://t.co/AJZYgMAHc0#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/TUodMWQAo5
— BCCI (@BCCI) December 14, 2025
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி நடந்த தர்மசாலாவில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்மூலம், இந்த வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டு தொடரை வெல்ல இந்திய அணி முயற்சிக்கும். இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை, இந்தப் போட்டி ’செய் அல்லது செத்துமடி’ போட்டியாக அமையும். ஏனெனில், தென்னாப்பிரிக்கா அணி 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை இழக்கும்.
நேரடி ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் விவரங்கள்:
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா டி20 தொடரின் 4வது போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. மேலும், இந்த போட்டியை தங்கள் மொபைல் போன்கள் அல்லது லேப்டாப்களில் பார்க்க விரும்புவோர் ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பில் கண்டு களிக்கலாம்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 அணிகள்:
இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா , வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.
ALSO READ: இந்தியா – தென்னாப்பிரிக்கா 3வது டி20 போட்டி.. வெற்றியுடன் 5 முக்கிய சாதனைகளை படைத்த இந்திய அணி!
தென்னாப்பிரிக்கா அணி:
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரூவிஸ், டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், அன்ரிச் நார்ட்ஜே, லூத்தோ சிபம்லா, லுங்கி என்கிடி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், கார்பின் போஷ், ஜார்ஜ் குயெல் ஸிண்டே, டோனி க்யூனி பார்ஸி, டோனி க்யூனி பார்ஸி.