IND vs SA 3rd T20: இந்தியா – தென்னாப்பிரிக்கா 3வது டி20 போட்டி.. வெற்றியுடன் 5 முக்கிய சாதனைகளை படைத்த இந்திய அணி!
IND vs SA 3rd T20 Records: முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 117 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில், இந்திய அணி 118 ரன்கள் என்ற இலக்கை 25 பந்துகள் மீதமுள்ள நிலையில் எட்டியது. அதன்படி, இந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் 237 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (IND vs SA 3rd T20) இடையேயான 3வது டி20 போட்டி தர்மசாலாவில் நேற்று அதாவது 2025 டிசம்பர் 14ம் தேதி நடைபெற்றது. இதில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 117 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில், இந்திய அணி 118 ரன்கள் என்ற இலக்கை 25 பந்துகள் மீதமுள்ள நிலையில் எட்டியது. அதன்படி, இந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் 237 ரன்கள் மட்டுமே எடுத்தது. இருப்பினும், இந்தப் போட்டி பல சாதனைகளைக் கண்டது. இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டியில் படைக்கப்பட்ட 5 சாதனைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: தோல்விக்கு காரணம் யார்..? வாக்குவாதத்தில் கம்பீர் – ஹர்திக்.. வைரலாகும் வீடியோ!




3வது டி20 போட்டியில் படைக்கப்பட்ட 5 பெரிய சாதனைகள்:
ஹர்திக் பாண்ட்யா உலக சாதனை:
𝐓𝐡𝐞 𝐄𝐥𝐢𝐭𝐞 𝐂𝐨𝐦𝐩𝐚𝐧𝐲 💯
Presenting the #TeamIndia trio in the 1⃣0⃣0⃣ T20I wickets club (senior men’s) 🫡#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/Y3OomZ7PrF
— BCCI (@BCCI) December 14, 2025
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸை வீழ்த்தி சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்டினார் ஹர்திக் பாண்ட்யா. இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000 ரன்கள் எடுத்து 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
2025ம் ஆண்டில் அதிக சர்வதேச ரன்கள் எடுத்தவர் சுப்மன் கில்:
2025ம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். இந்த ஆண்டு 35 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 1,764 ரன்கள் குவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 28 ரன்கள் மூலம் இந்த சாதனையை அடைந்தார். இதனை தொடர்ந்து, 2025ம் ஆண்டு ஏற்கனவே 1,753 ரன்கள் எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் சாதனையை முறியடித்தார்.
திலக் வர்மா ஆதிக்கம்:
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக திலக் வர்மாவின் சராசரி 70.50 ஆகும். டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சராசரி கொண்ட இந்தியர்களின் பட்டியலில் திலக் வர்மா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக 70.28 சராசரி கொண்ட விராட் கோலியின் சாதனையை திலக் வர்மா முறியடித்துள்ளார்.
கில் மற்றும் கோலி சாதனையை முறியடித்த திலக் வர்மா:
டி20 கிரிக்கெட்டில் வேகமாக 4,000 ரன்களை எட்டிய வீரர்களில் திலக் வர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில்லை முந்தி சாதனை படைத்தார். சுப்மன் கில் 129 இன்னிங்ஸ்களிலும், விராட் கோலி 138 இன்னிங்ஸ்களிலும் இந்த சாதனையை நிகழ்த்தினார். இவருக்கு அடுத்தபடியாக ருதுராஜ் கெய்க்வாட் (116) மற்றும் கே.எல். ராகுல் (117) ஆகியோர் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
டி20 போட்டிகளில் வேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:
வருண் சக்ரவர்த்தி தனது 32வது சர்வதேச டி20 போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். இவருக்கு முன்பு, குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.