AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs Pakistan: நெருப்பாக வரும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. மிரட்டப்போக்கும் 8 முக்கிய வீரர்கள்!

T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பையில் வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தநிலையில், 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியில் ஆட்டத்தை மாற்றக்கூடிய 8 வீரர்களை பற்றி பார்ப்போம்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Feb 2026 19:36 PM IST
2026 டி20 உலகக் கோப்பையில் நமீபியாவுக்கு எதிராக வெறும் 24 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினார் இஷான் கிஷன். மேலும், சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதேபோல், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இஷான் கிஷன் தனது அதிரடியை தொடர்ந்தால், நிச்சயம் இந்திய அணிக்கு வெற்றி கிட்டும்.

1 / 8
ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் என 3 வடிவங்களிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். இந்திய அணி கடைசி நேரத்தில் திணறும் போதெல்லாம் அதிரடியாக ரன்களை குவித்து வெற்றியை தேடி தருகிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் ஹர்திக் பாண்ட்யா தனது திறமையை நிரூபிக்கும் பட்சத்தில் இந்திய அணி நிச்சயம் பயன்பெறும்.

2 / 8
பாகிஸ்தானுக்கு எதிராக போட்டி என்று வரும்போதெல்லாம் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்டுள்ளார். கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு சிம்மசொப்பனமாக பும்ரா திகழ்ந்தார். எனவே, 2026 டி20 உலகக் கோப்பையில் பும்ரா தெறிக்க விடுவார்.

3 / 8
ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி முதலிடத்தில் உள்ளார்.   வருணின் சுழற்பந்து வீச்சு, சிறந்த பேட்ஸ்மேன்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எனவே, பாகிஸ்தானுக்கு எதிராக வருண் சக்கரவர்த்தி சுழல் தாண்டவம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 / 8
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் தற்போது சிறந்த ஃபார்மில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்திய அணி என்று வரும்போது, பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்துவதற்கு பாபர் அசாமின் அரைசதம் முக்கிய காரணமாக அமைந்தது.

5 / 8
சஹிப்சதா பர்ஹான்

சஹிப்சதா பர்ஹான்

6 / 8
2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய பேட்டிங் முதுகெலும்பை உடைத்த ஷாஹீன் அஃப்ரிடி, சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போராடி வருகிறார். இருப்பினும், இவரது பந்துவீச்சு தாக்குதல் இந்திய அணிக்கு தொல்லையாக அமையலாம். எனவே, இந்திய பேட்ஸ்மேன்கள் கவனத்துடன் எதிர்கொள்வது முக்கியம்.

7 / 8
2026 டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பிலிருந்தே உஸ்மான் தாரிக் பந்துவீச்சு அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்தநிலையில், உஸ்மான் தாரிக் இந்தியாவுக்குப் பரிச்சயமில்லாத ஒருவர் என்பதால், பாகிஸ்தானின் மர்ம சுழற்பந்து வீச்சாளர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பயம் காட்டலாம்.

8 / 8
Follow Us