AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இவ்வளவா? அதிர்ச்சியில் மக்கள்..

தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 2026 ஜனவரி மாதத்தை எடுத்துக்கொண்டால், தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்தது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 1,20,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், பிப்ரவரி மாதம் தொடங்கியதிலிருந்து தங்கத்தின் விலை சற்றுக் குறைந்தும் காணப்பட்டது. இருப்பினும், தற்போது வரை தங்கம் ஏற்றத் தாழ்விலேயே இருந்து வருகிறது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இவ்வளவா? அதிர்ச்சியில் மக்கள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Feb 2026 10:30 AM IST

தங்கம் விலை, பிப்ரவரி 14, 2026: தங்கம், வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்றத் தாழ்வுகளில் இருந்து வருகின்றன. சில நாட்களில் கணிசமாக தங்கத்தின் விலை குறைந்தாலும், பின்னர் மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கத்தின் இந்த விலை உயர்வு, நடுத்தர மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் எட்டாக்கனியாக மாறியுள்ளது. அந்த வகையில், பிப்ரவரி 14, 2026 தேதியான இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 160 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கம் 1,280 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய் 14,560-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூபாய் 1,16,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை:

இந்த தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 2026 ஜனவரி மாதத்தை எடுத்துக்கொண்டால், தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்தது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 1,20,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், பிப்ரவரி மாதம் தொடங்கியதிலிருந்து தங்கத்தின் விலை சற்றுக் குறைந்தும் காணப்பட்டது. இருப்பினும், தற்போது வரை தங்கம் ஏற்றத் தாழ்விலேயே இருந்து வருகிறது.

மேலும் படிக்க: பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்கம் வாங்க போறீங்களா.. இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

ஏன் இந்த விலை ஏற்றம்:

உலகப் பொருளாதார சீரற்ற தன்மையின் காரணமாக, முதலீட்டாளர்கள் உலகளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் மீது முதலீடு செய்து வருவதால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமெரிக்கா, ரஷ்யா, வெனிசுவேலா உள்ளிட்ட நாடுகளைச் சுற்றிய போர் பதற்றம் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த விலை உயர்வு வரக்கூடிய நாட்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: வட்டி மட்டுமே ரூ.11 லட்சம்.. இந்த திட்டத்தில் இப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்!

வெள்ளியின் விலையைப் பொருத்தவரையில், ஒரு கிராம் வெள்ளி எந்த மாற்றமும் இல்லாமல் 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 2,80,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
04 பிப்ரவரி 2026 ரூ.14,900 ரூ.1,19,200
05 பிப்ரவரி 2026 ரூ.14,320 ரூ.1,14,560
06 பிப்ரவரி 2026 ரூ.14,250 ரூ.1,14,000
07 பிப்ரவரி 2026 ரூ.14,420 ரூ.1,15,360
08 பிப்ரவரி 2026 ரூ.14,420 ரூ.1,15,360
09 பிப்ரவரி 2026 ரூ.14,650 ரூ.1,17,200
10 பிப்ரவரி 2026 ரூ.14,580 ரூ.1,16,640
11 பிப்ரவரி 2026 ரூ.14,790 ரூ.1,18,320
12 பிப்ரவரி 2026 ரூ.14,600 ரூ.1,16,800
13 பிப்ரவரி 2026 ரூ.14,400 ரூ.1,15,200
14 பிப்ரவரி 2026 ரூ. 14560  ரூ. 1,16,480

 

 

 

Follow Us