Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs SA 2nd T20: தோல்விக்கு காரணம் யார்..? வாக்குவாதத்தில் கம்பீர் – ஹர்திக்.. வைரலாகும் வீடியோ!

Hardik - Gambhir Fight Video: இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு இந்திய டிரஸ்ஸிங் ரூமில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. போட்டிக்குப் பிந்தைய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யா இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

IND vs SA 2nd T20: தோல்விக்கு காரணம் யார்..? வாக்குவாதத்தில் கம்பீர் – ஹர்திக்.. வைரலாகும் வீடியோ!
ஹர்திக் பாண்ட்யா - கவுதம் கம்பீர்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Dec 2025 18:43 PM IST

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் (India – South Africa T20 Series) தற்போது நடைபெற்று வருகிறது. முன்னதாக, இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் இந்திய அணி (Indian Cricket Team) 51 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இந்த போட்டியின் இந்திய அணியின் செயல்திறன் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக, இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்தளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. இதன் காரணமாக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது சரமாரியான விமர்சனங்களையும் இந்திய ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

ALSO READ: 7 போட்டிகளில் 7 தோல்விகள்.. 210 ரன்களை துரத்தும்போது சொதப்பும் இந்திய அணி!

ஹர்திக் பாண்ட்யா – கவுதம் கம்பீர் ஆகியோரின் வீடியோ:

இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு இந்திய டிரஸ்ஸிங் ரூமில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. போட்டிக்குப் பிந்தைய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யா இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதை சில கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இருப்பினும், வீடியோவில் எந்த ஆடியோவும் இல்லாததால், விவாதத்தின் சரியான பிரச்சினை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட மாற்றம்:


இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. 214 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. தொடர்ச்சியாக சொதப்பி வரும் துணை கேப்டன் சுப்மன் கில், இந்த போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 3வது இடத்தில் களமிறங்கிய அக்சர் படேல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். தொடர்ந்து, கேப்டன் சூர்யகுமார் யாதவும் 5 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 23 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஒரு புறம் திலக் வர்மா 62 ரன்கள் எடுத்து போராடிய போதும் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தர முடியவில்லை. பேட்டிங் வரிசையில் திடீரென பல மாற்றங்களை கவுதம் கம்பீர் கொண்டு வந்ததுதான் காரணம் என்று இந்திய ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ALSO READ: ஒளிபரப்பில் இருந்து விலகுகிறதா ஹாட் ஸ்டார்.. 2026 டி20 உலகக் கோப்பையை எங்கு காணலாம்?

தர்மசாலாவில் 3வது போட்டி

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி வருகின்ற 2025 டிசம்பர் 14ம் தேதி தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும். இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும், மேலும் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும் வாய்ப்பைப் பெறும். அதன்படி, தோல்வியிலிருந்து மீண்டு வலுவாக செயல்பட்டு இந்திய அணி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.