AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs Pakistan: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. கொழும்பு ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி?

Colombo Pitch Report: டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போதெல்லாம், சாதனைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் இந்தியாவிற்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இதுவரை நடந்த டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இந்திய அணி ஒருதலைப்பட்சமாக வெற்றியை கண்டது.

India vs Pakistan: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. கொழும்பு ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி?
இந்தியா - பாகிஸ்தான்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Feb 2026 15:25 PM IST

2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா – பாகிஸ்தான் (India vs Pakistan) இடையிலான போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியானது கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டெடியத்தில் மோதுகின்றன. இது ஒரு குரூப் ஏ போட்டி என்றாலும், இதன் முக்கியத்துவம் ஒரு இறுதிப் போட்டிக்குக் குறைவாக இருக்காது என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இந்தப் போட்டியை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக, பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. சொந்த மண்ணில் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற பிறகு, இந்திய அணி கொழும்பிற்கு செல்ல உள்ளது. இந்தநிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறும் கொழும்பு ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே ஒரு முறை! பாகிஸ்தான் அணியிடம் தோற்ற இந்திய அணி.. எப்போது தெரியுமா?

கொழும்பு ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி..?

கொழும்பின் ஆர்.பிரேமதாச ஸ்டேடியத்தின் பிட்ச் பாரம்பரியமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கிய பங்கு வகிக்கும். எனவே, சுழற்பந்து வீச்சை சிறப்பாக விளையாடி அழுத்தத்தின் கீழ் திறம்பட செயல்பட்டால், இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. அதன்படி, டாஸ் வென்ற பிறகு முதலில் பேட்டிங் செய்வது ஒரு நல்ல தேர்வாக அமையும்.

ஹெட் டூ ஹெட்:

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போதெல்லாம், சாதனைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் இந்தியாவிற்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இதுவரை நடந்த டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இந்திய அணி ஒருதலைப்பட்சமாக வெற்றியை கண்டது.

இதுவரை நடந்த 8 போட்டிகளில் இந்திய அணி 7 போட்டிகளிலும், பாகிஸ்தான் ஒரு போட்டியிலும் வெற்றியை பெற்றுள்ளது. பாகிஸ்தானின் ஒரே வெற்றி 2021 டி20 உலகக் கோப்பையில் நடந்தது.

ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் போட்டி எதிரொலி! இலங்கைக்கு விமான கட்டணம் பலமடங்கு உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியை எங்கு காண்பது..?

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் குரூப் ஏ-வில் இடம் பிடித்துள்ளது. வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது வெற்றி பெறும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

இரு அணிகளுக்கு இடையிலான இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு தொடங்கும், டாஸ் மாலை 6:30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் போட்டியை நேரடியாகப் பார்க்கலாம்.

Follow Us