AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: இந்தியாவுக்காக டி20யில் அதிக விக்கெட்டுகள்.. சாதனை படைக்க காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!

Arshdeep singh Record: 2026 டி20 உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது 3வது டி20 உலகக் கோப்பையில் விளையாடி வருகிறார். இதற்கு முன்பு, கடந்த 2022 மற்றும் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Feb 2026 21:07 PM IST
சமீபத்தில் நடந்த அமெரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசி இருந்தார். அப்போது, வருகின்ற 2026 பிப்ரவரி 12ம் தேதி நடைபெறும் நமீபியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங், டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.

1 / 6
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் அர்ஷ்தீப் சிங் தற்போது 2வது இடத்தில் உள்ளார். அஸ்வினின் சாதனையை முறியடிக்க 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது.

2 / 6
2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அடுத்ததாக வருகின்ற 2026 பிப்ரவரி 12ம் தேதி நமீபியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், அஷ்வினின் சாதனையை சமன் செய்வார். அதுவே, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

3 / 6
டி20 உலகக் கோப்பையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 24 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேநேரத்தில், அர்ஷ்தீப் சிங் 15 போட்டிகளில் மட்டுமே விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

4 / 6
இந்தபட்டியலில், ஜஸ்பிரித் பும்ரா 18 போட்டிகளில் 26 விக்கெட்டுகளுடன் 3வது இடத்திலும், ஹர்திக் பாண்ட்யா 25 போட்டிகளில் 24 விக்கெட்டுகளுடன் 4வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 30 போட்டிகளில் 22 விக்கெட்டுகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

5 / 6
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவின் முன்னணி விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக அர்ஷ்தீப் சிங் இதுவரை 77 போட்டிகளில் விளையாடி 120 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் பும்ரா 107 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

6 / 6
Follow Us