India vs Pakistan: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே ஒரு முறை! பாகிஸ்தான் அணியிடம் தோற்ற இந்திய அணி.. எப்போது தெரியுமா?
T20 World Cup History: இந்தியா - பாகிஸ்தான் இடையில் இதுவரை 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி 7 போட்டிகளிலும், பாகிஸ்தான் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தநிலையில், டி20 உலகக் கோப்பையில் வரலாற்றில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை ஒரே ஒரு முறை வீழ்த்தியுள்ளது.
2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா – பாகிஸ்தான் போட்டி (India vs Pakistan) விரைவில் நம்மை நெருங்கி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி இரவு 7 மணிக்கு கொழும்பு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையில் இதுவரை 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி 7 போட்டிகளிலும், பாகிஸ்தான் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தநிலையில், டி20 உலகக் கோப்பையில் வரலாற்றில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை ஒரே ஒரு முறை வீழ்த்தியுள்ளது. அது எப்போது, எங்கே உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: பிப்ரவரி 15ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்?
பாகிஸ்தான் அணி இந்தியாவை எப்போது டி20 உலகக் கோப்பையில் வீழ்த்தியது..?
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பையில் மோதின. இந்த போட்டியின்போது இந்தியாவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவிற்கு எதிராக முதல் முறையாக பாகிஸ்தான் அணி வெற்றியை பதிவு செய்தது. இதன்பிறகு, பாகிஸ்தான் அணியால் இந்தியாவிற்கு எதிராக மற்றொரு வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை.




2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 16வது போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதல் பந்துவீசுவதாக முடிவு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் ஓவரின் 4வது பந்திலேயே ரோஹித் சர்மா எல்பிடபிள்யூ முறையில் ரன் எதுவும் எடுக்காமல் அப்ரிடி பந்தில் அவுட்டானார்.
தொடர்ந்து, அப்ரிடி வீசிய 3வது ஓவரில் 8 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்ததாக, உள்ளே வந்த தற்போதைய இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் வெறும் 8 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி உதவியுடன் 11 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதன்பிறகு, கோலியுடன் ஒன்றிணைந்த ரிஷப் பண்ட் இந்திய அணியை மீட்கும் முயற்சியில் களமிறங்கினார். பவர்பிளேயில் (முதல் ஆறு ஓவர்கள்) இந்தியா 3 விக்கெட்டுகளுக்கு 36 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 20 ரன்களுடனும், ரிஷப் பந்த் 1 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தபோது, ரிஷப் பண்ட் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணிக்காக ரன்களை சேர்க்க முயற்சித்த இந்திய கேப்டன் விராட் கோலி 57 ரன்களில் ஆட்டமிழந்தார். 19வது ஓவரின் நான்காவது பந்தில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானிடம் கோலியிடம் கேட்ச் கொடுத்து அஃப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். கோலி 49 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 57 ரன்கள் அடித்தார். இதன் காரணமாக, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது.
மிரட்டிய பாகிஸ்தான் அணி:
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் களமிறங்கினர். இந்தியாவுக்காக புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். ரிஸ்வான் தான் சந்தித்த 2வது பந்தில் ஒரு பவுண்டரியையும், அடுத்த பந்தில் ஒரு சிக்ஸரையும் அரித்தார். ஜஸ்பிரித் பும்ராவின் அடுத்த ஓவரில் பாபர் அசாம் ஒரு பவுண்டரியை அடித்தார். இதன் காரணமாக, பாகிஸ்தான் 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்தது.
ALSO READ: டி20 உலகக் கோப்பையில் 9வது முறை மோதும் IND – PAK.. யார் அதிக முறை வெற்றிபெற்று ஆதிக்கம்?
இந்த அதிரடி தொடர்ந்ததன் காரணமாக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் தொடக்க ஜோடி முதல் 6 ஓவர்களில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 43 ரன்கள் எடுத்தது. பாபர் 17 ரன்களுடனும், ரிஸ்வான் 25 ரன்களுடனும் விளையாடினர். 13வது ஓவரின் நான்காவது பந்தில் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து பாபர் தனது அரை சதத்தை நிறைவு செய்தார், 15வது ஓவரின் இரண்டாவது பந்தில் பும்ராவுக்கு எதிராக பவுண்டரி அடித்து ரிஸ்வான் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.
இவர்கள் இருவரின் விக்கெட்டுகளையும் எடுக்க முடியாமல் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் திணறினர். இறுதியில், பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் என்ற இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. முகமது ரிஸ்வான் 55 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உதவியுடன் 79 ரன்களுடனும், கேப்டன் பாபர் அசாம் 52 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உதவியுடன் 68 ரன்களுடன் கடைசிவரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.