Aishwarya Lekshmi: இப்படிப்பட்ட உணர்ச்சிகள் வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை – கண்ணீர்மல்க பேசிய ஐஸ்வர்யா லெக்ஷ்மி!
Aishwarya Lekshmi Emotional Speech: மலையாளம் சினிமாவின் மூலம் தென்னிந்திய மக்களிடையே பேமசானவர் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இவரின் கட்டா குஸ்தி 2 படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், வெற்றிவிழா சந்திப்பு கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கட்டா குஸ்தி 2 படம் குறித்து எமோஷனலாக பேசியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி (Aishwarya Lekshmi) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2). இதை இயக்குநர் செல்ல அய்யாவு (Chella Ayyavu) இயக்க, ஐசரி கே கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் (Vishnu Vishal) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்திருந்தார். இந்த கட்டா குஸ்தி 2 படமானது பேமிலி பொழுதுபோக்கு மற்றும் குஸ்தி போன்ற கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இப்படமானது 2023ம் ஆண்டில் வெளியான கட்டா குஸ்தி 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில், இப்படமானது அமைந்துள்ளது. இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் நிலையில், பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கட்ட குஸ்தி 2 படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.
அந்த விதத்தில் இப்படம் வசூல் மற்றும் விமர்சனங்கள் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதை முன்னிட்டு சமீபத்தில் இப்படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்ட நிலையில், அதில் இந்த திரைப்படம் குறித்து நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி எமோஷனலாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: தனுஷ் ரசிகர் மன்ற கொடி விவகாரம் – விளக்கம் அளித்த சுப்ரமணிய சிவா
கட்டா குஸ்தி 2 பட வெற்றிவிழா சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி எமோஷனலாக பேசிய விஷயம்:
அந்த சந்திப்பில் பேசிய நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அதில் “நான் ஒவ்வொரு நாளும் கட்ட குஸ்தி 2 படத்தின் ஷூட்டிங்கிற்கு எழும்போது,, படத்தில் எந்த குறையும் இருக்க கூடாது, ஆடியன்ஸ் அதை எப்போதும் உணரக்கூடாது. எங்களால் முடிந்த சிறப்பை வழங்கவேண்டும் என்பதே எங்களின் கனவாக இருக்கும். ஆனால், இதுபோன்ற வெற்றி திரைப்படங்கள் எப்போதாவதுதான் வரும். படம் ரிலீஸாகி ஐந்தாவது நாளிலே அதன் வெற்றியை நாம் இணைந்து கொண்டாடுகிறோம் என்பதை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்துடன் மோதும் தனுஷின் ஓம் படம்.. ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதிசெய்த படக்குழு!
இந்த சமையத்தில் சாராவுக்கு ரொம்ப நன்றி சொல்லுகிறேன், எனக்கு இப்படிப்பட்ட உணர்ச்சிகள் வரும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், அவர் என்னை மிகவும் உணரவைத்தார். இதை சொன்னால் நான் அழத்தொடங்கிவிடுவேன். சாரி, மற்றும் நன்றி” என அந்த நிகழ்ச்சியில் அவர் கண்ணீர்மல்க எமோஷனலாக பேசியிருந்தார்.
கட்டா குஸ்தி 2 படம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
One blockbuster. One unforgettable celebration. 🔥
A grand welcome to the Team and Stars of #GattaKusthi2 Thanks Giving Meet at Prasad Studios Today. #VelsFilmInternational #drIsharikganesh #GattaKusthi2Team
Produced by @VelsFilmIntl & @VVStudioz.
A film by @ChellaAyyavu.
A… pic.twitter.com/hOKfgxAXHH— Vels Film International (@VelsFilmIntl) July 9, 2026
இந்த படமானது குடும்ப ரசிகர்களை ஈர்த்துவரும் நிலையில், திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. வெறும் 3 நாட்களிலே இப்படமானது உலகமெங்கும் கிட்டத்தட்ட ரூ 22 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. இதையடுத்து விரைவில் ரூ 50 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



