AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கட்டா குஸ்தி 2 படத்திலிருந்து வெளியானது சில் மம்மி பாடல் வீடியோ

Chill Mummy Video Song From Gatta Kusthi 2 Movie | தமிழ் சினிமாவில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் படம் கட்டா குஸ்தி 2. இந்தப் படத்தில் இருந்து சில் மம்மி பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

கட்டா குஸ்தி 2 படத்திலிருந்து வெளியானது சில் மம்மி பாடல் வீடியோ
கட்டா குஸ்தி 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jul 2026 12:36 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி படங்களை தயாரித்தும் வருகின்றார். இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் கட்டா குஸ்தி 2. முன்னதாக தமிழ் சினிமாவில் ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற கட்டா குஸ்தி படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் செல்ல அய்யாவு எழுதி இயக்கி உள்ள இந்த கட்டா குஸ்தி 2 படத்தில் முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்களுடன் தற்போது புதிதாக பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையே நிறைய வித்யாசங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

கட்டா குஸ்தி 2 படத்திலிருந்து வெளியானது சில் மம்மி பாடல் வீடியோ:

படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் பாடல்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து சில் மம்மி என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ள நிலையில் சில் மம்மி பாடலை மித்ரன் செண்பகராஜ் பாடியுள்ளார். மேலும் மோகன் ராஜன் இந்த சில் மம்மி பாடலை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Kayadu Lohar: மஞ்சணத்தி படத்திற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் – கயாடு லோஹர்!

கட்டா குஸ்தி 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… உங்கள் அனைவரிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கோருகிறேன் – எமோஷ்னலாக பேசிய ரவி மோகன்

Follow Us