AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gatta Kusthi 2: பேமிலி ரசிகர்களின் வரவேற்பு.. 3 நாட்களில் கட்டா குஸ்தி 2 பட எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

Gatta Kusthi 2 Collection: தமிழில் விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளியான புத்தம் புது திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2. இதை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்க, தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படம் 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி முதல் திரையரங்கில் வெளியான நிலையில், இப்படத்தின் 3வது நாள் வசூல் குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

Gatta Kusthi 2: பேமிலி ரசிகர்களின் வரவேற்பு.. 3 நாட்களில் கட்டா குஸ்தி 2 பட எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
கட்டா குஸ்தி 2 மூன்றாம் நாள் வசூல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Jul 2026 16:41 PM IST

இயக்குநர் செல்லா அய்யாவு (Chella Ayyavu) இயக்கத்தில், மற்றும் விஷ்ணு விஷாலின் (Vishnu Vishal) நடிப்பிலும் சிறப்பாக வெளியான திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2). இப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி (Aishwarya Lekshmi) நடித்திருந்தார். இப்படம் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான கட்டா குஸ்தி 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இதில் விஷ்ணு விஷாலுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாகரன், கருணாஸ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த் படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் திரையரங்குகளில் சிறப்பாக வெளியானது.

முதல் நாளில் உலகமெங்கும் கிட்டத்தட்ட 4000 மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில், 3வது நாள் முடிவில் உலகமெங்கும் இப்படமானது எவ்வளவுக்கு வசூலித்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: வாட்ஸ் ஆப் DP-யை மாற்றி வலை.. நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் மோசடி முயற்சி!

கட்டா குஸ்தி 2 படத்தின் 3வது நாள் உலகளாவிய வசூல் :

ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்த 2வது படமாக இந்த கட்டா குஸ்தி 2 படம் உருவாகியிருந்தது. இதில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் விஷ்ணு வில்ஷல இருவருமே குஸ்தி போட்டியாளர்களாகவே நடித்துள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனை, அவர்களின் பிரச்சனையை இறுதியில் ஒரு குஸ்தி போட்டியின் மூலமாக தீர்ப்பது.

இதையும் படிங்க: சூர்யா 47 படம் எப்படி இருக்கும்? இணையத்தில் வைரலாகும் தகவல்

இதற்கிடையே நகைச்சுவை, எமோஷனல் மற்றும் கலகலப்பு என பேமிலி படமாக இருந்தது. இப்படமானது 3வது நாள் முடிவில் உலகமெங்கும் சுமார் ரூ 22 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாம். இது குறித்த அறிவிப்பை விஷ்ணு விஷால் வெளியிட்டிருக்கிறார்.

விஷ்ணு விஷால் வெளியிட்ட கட்டா குஸ்தி 2 படத்தின் 3வது நாள் வசூல் குறித்த அறிவிப்பு பதிவு:

கட்டா குஸ்தி 2 படமானது தற்போது தமிழகத்தில் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. பேமிலி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. விரைவில் இப்படமானது ரூ 50 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us