AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா 47 படம் எப்படி இருக்கும்? இணையத்தில் வைரலாகும் தகவல்

Suriya 47 movie update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் 47-வது படமாக உருவாகி வரும் சூர்யா 47 படம் எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சூர்யா 47 படம் எப்படி இருக்கும்? இணையத்தில் வைரலாகும் தகவல்
சூர்யா 47Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jul 2026 15:19 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்தப் படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது சூர்யா 47 படத்தின் ஷூட்டிங். இயக்குநர் ஜித்து மாதவன் இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சூர்யா 47 படத்தின் கதை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சூர்யா 47 படத்தின் கதை இதுதானா?

சூர்யா 47 திரைப்படம் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ஆவேஷம் என்ற மலையாளப் பட பாணியிலான ஒரு முழுமையான ஜாலியான படமாக அமையவுள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்ரது. இதில், ஒரு தீவிரமான வழக்கை விசாரிக்கும் அதே வேளையில், அவ்வளவாகக் கண்டிப்பு இல்லாத ஒரு குழுவுடன் இணைந்து செயல்படும், வெளிப்படையான மற்றும் கலகலப்பான காவல் அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இப்படம் 2026 தீபாவளி சமயத்தில் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்படலாம். அப்படி நடந்தால், ஒரே ஆண்டில் சூர்யாவின் மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் சூழல் உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… பிக் பாஸ் போலவே வந்த புதிய ரியாலிட்டி ஷோ.. அட இப்படியா இருக்கும்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியானது இதயம் முரளிப் படத்தின் ட்ரெய்லர்

Follow Us