பிக் பாஸ் போலவே வந்த புதிய ரியாலிட்டி ஷோ.. அட இப்படியா இருக்கும்!
Second Love Reality Show: தமிழில் சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர்போன தொலைக்காட்சிதான் விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் பிக் பாஸ் போலவே புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகவுள்ளதாம். இந்த ஷோவை ரம்யா கிருஷ்ணன் தொகுக்கும் நிலையில், இதன் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் மக்கள் மத்தியில் பேராதரவுடன் பிரபலமாக இருந்துவரும் சின்னத்திரை தொலைக்காட்சிதான் விஜய் டிவி (Vijay TV). இந்த தொலைக்காட்சியில் சீரியல்கள் எந்த அளவிற்கு பிரபலமோ, அதற்கு ஒரு படி மேலாக ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம். இந்த தொலைக்காட்சியில் பல புத்தம் புது மற்றும் புதிய கான்செப்ட் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் (Reality shows) ஒளிபரப்பாகிவருகிறது. நியா நானா, ஹேப்பி வைப் ஹேப்பி லைஃப், ஸ்டார்ட் மியூசிக், குக் வித் கோமாளி (Cook With Comai) மற்றும் சூப்பர் சிங்கர் (Super Singer) என பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிவருகிறது. அதிலும் விஜயன் டிவி ஆரம்பத்திலிருந்து நீயா நானா மற்றும் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் தற்போதுவரையிலும் பிரபலமாக மற்றும் அதிக டிஆர்பி கொண்ட நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு ஒருபடி மேலாக டிஆர்பி-யுடன் விமர்சனங்களையும் பெரும் நிகழ்ச்சி பிக் பாஸ் (Bigg Boss).
இந்த நிகழ்ச்சியானது 100 நாட்கள் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் வைத்து, அவர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகளை ஒளிபரப்பும் ரியாலிட்டி ஷோ. தற்போது இந்த நிகழ்ச்சியை போலவே விஜய் டிவியில் புது நிகழ்ச்சி ஒன்றானது தொடங்கவுள்ளதாம். இதை நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) தொகுத்து வழங்கும் நிலையில், இதன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: சாய் அபயங்கர் பிஆர் மூலம் பிரபலமாவதாக கூறுகிறார்கள் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
பிக் பாஸ் போலவே ஒளிபரப்பாக காத்திருக்கும் புது நிகழ்ச்சி:
பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு, 20 போட்டியாளர்களை ஒரே வீட்டில் அடைத்து வைத்து அவர்களுக்கு டாஸ்க் மற்றும் அவர்களிடையே நடக்கும் பிரச்சனைகள் போன்றவற்றை காட்டும் நிகழ்ச்சியாக இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 100 நாட்கள் ஒளிபரப்பாகிவரும் நிலையில், இதே போலவே புது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறதாம். அண்ட் நிகழ்ச்சிக்கு செகண்ட் லவ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் போலவே இருக்கும் செகண்ட் லவ் நிகழ்ச்சி :
இந்த புது நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் நிலையில், இதில் கிட்டத்தட்ட 12 போட்டியாளர்கள் கலந்துகொள்கிறார்களாம். இந்த நிகழ்ச்சியானது ஒரே வீட்டில் 6 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 6 பெண் போட்டியாளர்கள் இருப்பார்களாம். ஆனால் இந்த் நிகழ்ச்சியானது பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான கான்செப்ட்டில் இருக்குமாம். இதற்க்கு செகண்ட் லவ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் இது எப்போது வெளியாகும் என அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: ஆப்பிரிக்காவில் நடக்கிறதா அனிருத்தின் திருமணம்? எப்போது தெரியுமா? – வைரலாகும் தகவல்!
செகண்ட் லவ் என்ற புது நிகழ்ச்சி குறித்து வெளியான அறிவிப்பு பதிவு:
View this post on Instagram
இந்த நிகழ்ச்சியானது விஜய் டிவி மற்றும் ஜியோஹாட் ஸ்டார் ஓடிடி என இரண்டிலும் ஒளிபரப்பாகுமாம். இந்த ரியாலிட்டி ஷோ வரும் 2026ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி முதல், திங்கள் டு வெள்ளிவரை இரவு 10:30 மணியளவில் ஒளிபரப்பாகவுள்ளதாம். தற்போது இது தொடர்பான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.