AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Priyanka Deshpande: அப்பா அம்மா ஆயாச்சு… ஹேப்பி நியூஸ் சொன்ன தொகுப்பாளினி பிரியங்கா தேஷாபாண்டே!

Priyanka Deshpande Pregnancy: சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்துவருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் கடந்த 2025ம் ஆண்டில் வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தற்போது இந்த தம்பதி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளனர். அதை நகைச்சுவையான வீடியோ மூலம் பிரியங்கா ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

Priyanka Deshpande: அப்பா அம்மா ஆயாச்சு… ஹேப்பி நியூஸ் சொன்ன தொகுப்பாளினி பிரியங்கா தேஷாபாண்டே!
பிரியங்கா தேஷாபாண்டேImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 23 Jun 2026 18:41 PM IST

தமிழில் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக (TV Hostess) இருந்துவருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே (Priyanka Deshpande). இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். ஆரம்பத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வி.ஜே.வாக (VJ) பணியாற்றிவந்த நிலையில், அப்படி அதிலிருந்தே விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிவந்தார். இவர் சூப்பர் சிங்கர் (Super Singer), மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை, ஸ்டார்ட் மியூசிக் (Start Music) மற்றும் பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக பணியாற்றியிருக்கிறார். இவருக்கு ஏற்கனவே 2016ம் ஆண்டில் முதல் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், சில பிரச்சனைகளின் காரணமாக அவர்களின் திருமண உறவு 2022ம் ஆண்டில் நிறைவுக்கு வந்தது. இதை கடந்த 2025ம் ஆண்டில் வசி சச்சி (Vasi Sachi) என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இவர்களின் திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருந்துவரும் நிலையில், சமீபத்தில் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். அந்த கொண்டதை தொடர்ந்து பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் வசி சச்சி தம்பதியினர் தங்கள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு பல்வேறு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்தி தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: என்ன டபுள் ட்ரீட்டுக்கு தயாரா? நாளை வெளியாகிறது ரஜினிகாந்தின் தலைவர் 173 பட டைட்டில்! இயக்குநர் யார்?

கர்ப்பமாக இருப்பது குறித்து நகைச்சுவை வீடியோ மூலம் அறிவித்த பிரியங்கா தேஷ்பாண்டே:

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, இந்த வீடியோவில் பாடல் ஒன்றிற்கு குத்து நடனம் போடா, அவரின் கணவர் வசி பின்னாலிருந்து எதற்காக என யோசிக்கிறார். மேலும் தலையில் “Mom” என்ற தொப்பியை பிரியங்கா அணிந்து, அவரின் கவருக்கு “Dad” என்ற தொப்பியை கொடுத்து. தங்கள் கர்ப்பமாக இருப்பதை நகைச்சுவையாக அறிவித்துள்ளார். தற்போது இவருக்கு பிரபல நடிகர்கள் முதல் பல்வேறு ரசிகர்களும் தங்களின் வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: அப்போ தீபாவளிக்கு இல்லையா? கார்த்தியின் சர்தார் 2 பட ரிலீஸ் எப்போது தெரியுமா?

திருமண நாளை வெளிநாட்டில் கொண்டாடிய பிரியங்கா தேஷ்பாண்டே:

தொகுப்பாளினி பிரியங்காவிற்கு கடந்த 2025ம் ஆண்டில் ஏப்ரல் 16ம் தேதியில், தனது குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் திருமணம் சிறப்பாக நடைபெற்றிருந்தது. அவர் பிரபல தொழிலதிபரான வசி என்பவரை திருமணம் செத்துக்கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க, கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதியில் தங்களின் முதலாவது திருமண நாளை கொண்டாடியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் கூறியுள்ளார்.

Follow Us