திருமண நாளில் கணவருடன் வீடியோ வெளியிட்ட பிரியங்கா தேஷ்பாண்டே!
Priyanka Deshpande Wedding Anniversary: தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருந்துவருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் இன்று திருமண நாளை கொண்டாடிவரும் நிலையில், அவரின் கணவர் வாசியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிரியங்கா என்ன செய்திருக்கிறார் என பாருங்க.
தமிழி பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியாக புகழ்பெற்றவர் பிரியங்கா தேஷ்பாண்டே (Priyanka Deshpande). இவர் தமிழில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக (Hostess) இருந்துவருகிறார். சூப்பர் சிங்கர் (Super Singer) முதல் ஸ்டார் மியூசிக் (Start Music) போன்ற பல்வேறு ரியாலிட்டி மற்றும் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்துள்ளார். அந்த வகையில் பெப்சி உமா மற்றும் டிடி போன்ற தொகுப்பாளர்களுக்கு அடுத்ததாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருந்துவருகிறார். இவர் சன் டிவி, சன் மியூசி, ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி என தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் தற்போது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2025ம் ஏப்ரல் 16ம் தேதியில், பிரபல தொழிலதிபர் வாசி சச்சி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அந்த வகையில் இன்றுடன் (16/04/2026) ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், தனது முதல் வருட திருமண நாளை கொண்டாடும் விதத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிரியங்கா தேஷ்பாண்டே தனது கணவருடன் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.




இதையும் படிங்க: டோவினோ தாமஸ் – கயாடு லோஹரின் ‘பள்ளிச்சட்டம்பி’ பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:
View this post on Instagram
பிரபல தொகுப்பாளினியாக இருந்துவருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சன் டிவி, விஜய், டிவி மற்றும் ஜீ தமிழ் போன்று தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார். கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் தற்போது ஹேப்பி வைப் ஹேப்பி லைஃப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். இவர் தொகுப்பாளராக பல விமர்சனங்களை பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: என்னை கம்பியால் அடித்தார்கள் – குக்வித் கோமாளி பிரபலங்கள் மீது புகார் கொடுத்த வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர்!
மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியளர்களாக பங்கேற்றுள்ளார். இந்த சீசனில் இறுதியாக வெளியேறியுள்ளார். மேலும் பிக் பாஸ் சீசன் 9ல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். மேலும் தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் முழுவதுமாக ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில் தனது திருமண நாளை முன்னிட்டு கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடிய செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.