Pallichattambi: டோவினோ தாமஸ் – கயாடு லோஹரின் ‘பள்ளிச்சட்டம்பி’ பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
Pallichattambi First Day Collection: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் டோவினோ தாமஸ். இவரின் நடிப்பில் கடந்த 2026 ஏப்ரல் 15ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் பள்ளிச்சட்டம்பி. இப்படமானது வெளியாகி ஒரு நாள் நிறைவடைந்த நிலையில், அதன் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் டோவினோ தாமஸ் (Tovino Thomas). இவர் தமிழில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இவர் மலையாள சினிமாவில் பிரபலமான நட்சத்திரமாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் கடந்த 2026ம் ஆண்டில் வெளியான திரைப்படம்தான் பள்ளிச்சட்டம்பி (Pallichattambi). இந்த படத்தில் டோவினோ தாமஸ் ஹீரோவாக நடிகை, அவருக்கு ஜோடியாக நடிகை காயடு லோஹர் (Kayadu Lohar) நடித்துள்ளார். இதை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி (Dijo Jose Antony)இயக்கியுள்ள நிலையில், சிறப்பாக வந்துள்ளது.
இந்த படமானது முழுக்க அரசியல் கதைக்களத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வரவேற்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட ஒரு நாளை கடந்துள்ள நிலையில், உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படமானது முதல் நாள் வசூலில் கிட்டத்தட்ட ரூ 10.34 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாம்.




இதையும் படிங்க: ஒரு மாஸ் ஹீரோவின் கதை.. கருப்பு படம் இப்படிதான் இருக்கும் – ஆ.ஜே.பாலாஜி!
டோவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி பட முதல் நாள் வசூல் குறித்த பதிவு:
10.34 Crores Worldwide Gross📈
Vishu Grand Opening 🔥
Running Successfully In Theatres | Grab Your Tickets Now🎟️
A film by Dijo Jose Antony 🎥✨#Pallichattambi#DijoJoseAntony#TovinoThomas#KayaduLohar pic.twitter.com/fQg0gU2VK0
— Ramesh Bala (@rameshlaus) April 16, 2026
இந்த பள்ளிச்சட்டம்பி படமானது ஆக்ஷன், அரசியல் மற்றும் உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இப்படம் கிட்டத்தட்ட 1950ம் ஆண்டுகளில் நடந்த அரசியல் மற்றும் அதில் நடந்த பிரிவினைகளை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்துவருகிறது. இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிவருகிறது.
இதையும் படிங்க: ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது வேதனையாகவும் பயமாகவும் இருந்தது – இயக்குநர் விக்னேஷ் ராஜா
அந்த விதத்தில் இப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் அதிரடி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் வேடமும் சிறப்பாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளிலே ரூ 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில், வார இறுதியில் இன்னும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.