AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!

Kayadu Lohar About Im Game Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபாமான இளம் நாயகியாக இருந்துவருபவர் கயாடு லோஹர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், துல்கர் சல்மானுடன் நடித்துவரும் ஐஆம் கேம் படத்தின் கதைக்களம் பற்றி பகிர்ந்துள்ளார். அது குறித்து விவரகமாக பார்க்கலாம்.

Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
துல்கர் சல்மான் மற்றும் கயாடு லோஹர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Apr 2026 20:28 PM IST

இளம் நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar), தற்போது தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் எல்லாம் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர் தமிழில் நடித்திருந்த படம்தான் டிராகன் (Dragon). இப்படத்தில் பல்லவி என்ற வேடத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மேலும் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருந்தது. அந்த வகையில் இவரின் நடிப்பில் மலையாள மொழியில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் பள்ளிச்சட்டம்பி (Pallichattambi). இப்படமானது அரசியல் மற்றும் அதிரடி திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், 2026 ஏப்ரல் 15ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

அந்த வகையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் மேலும் மலையாள மொழியில் கயாடு லோஹர் நடித்துவரும் படம்தான் ஐஆம் கேம் (Im Game). இப்படத்தில் துல்கர் சல்மானுடன் (Dulquer Salmaan) இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் கதைக்களம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: வருண் தவான், பூஜா ஹெக்டே – மிருணாள் தாகூரின் புது படம் – வெளியானது ஃபர்ஸ்ட் லுக் டீசர்!

துல்கர் சல்மானுடன் நடிக்கும் ஐஆம் கேம் படம் குறித்து அப்டேட் தெரிவித்த கயாடு லோஹர் :

நடிகை கயாடு லோஹர் பேசுகையில், “ஐஆம் கேம் படம் மீது அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். ஏனென்றால் துல்கர் சல்மானுடன் நான் நடிக்கும் முதல் படம் இது. ஐஆம் கேம் படம் பற்றி சொல்லவேண்டும் என்றால், பள்ளிச்சட்டம்பி படத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான படம். அதனால் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.

இதையும் படிங்க: ஆண் குழந்தைக்கு அப்பாவானார் பிக்பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி – வைரலாகும் போட்டோ

ஏனென்றால் எனது இருவிதமான நடிப்பு இப்படத்தின் மூலம் தெரியும், பள்ளிச்சட்டம்பி படத்திலிருந்து, ஐஆம் கேம் படம் வித்தியாசமானது. இப்படத்தின் கதை மற்றும் துல்கர் சல்மானை அனைவருக்கும் பிடிக்கும்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ ஆம் கேம் படம் குறித்து நடிகை கயாடு லோஹர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

நடிகை கயாடு லோஹர் பள்ளிச்சட்டம்பி மற்றும் ஐ ஆம் கேம் என இரு மலையாள படங்களில் நடித்துள்ளார். இதில் பள்ளிச்சட்டம்பி படம் விரைவில் வெளியாகின்ற நிலையில், ஐ ஆம் கேம் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது. இதில் நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கவுள்ளார். இப்படமானது அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் தயாராகிவருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை துல்கர் சல்மான் தயாரிக்கும் நிலையில், 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us