Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Pallichattambi: டோவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் ‘காட்டு செண்பகமே’ பாடல் வெளியீடு!

Pallichattambi Movie First Single: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டோவினோ தாமஸ். இவர் மற்றும் கயாடு லோஹர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பள்ளிச்சட்டம்பி. இந்த படமானது விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடலான காட்டு செண்பகமே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Pallichattambi: டோவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் ‘காட்டு செண்பகமே’ பாடல் வெளியீடு!
காட்டு செண்பகமே பாடல்
Barath Murugan
Barath Murugan | Updated On: 13 Feb 2026 12:26 PM IST

மலையாள சினிமாவில் பிரபல கதாநாயகனாக கலக்கிவருபவர் டோவினோ தாமஸ் (Tovino Thamos). இவரின் நடிப்பில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் படங்கள் தயாராகிவருகிறது. அந்த விதத்தில் சுரேஷ் பாபு எழுத்திலும், இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி (Dijo Jose Antony) இயக்கத்திலும் உருவாகியுள்ள படம்தான் பள்ளிச்சட்டம்பி (Pallichattambi). இந்த படத்தில் நடிகர் டோவினோ தாமஸ் ஆக்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக டிராகன் (Dragon) திரைப்படத்தின் புகழ்ப் பெற்ற நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடித்துள்ளார். இந்த படமானது 90ஸ் காலகட்டத்தில் நடக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் டிராமகாவாக தயாராகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.

இந்த பள்ளிச்சட்டம்பி படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துவரும் நிலையில், தற்போது இப்படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. “காட்டு செண்பகமே” (Kaattu Shenbagam ) என்ற தமிழ் வெர்சன் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: நடிகர் நானியின் தி பாரடைஸ் படத்தின் புது ரிலீஸ் தேதி இதுதான்… வைரலாகும் அப்டேட்

டோவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் பாடல் குறித்து வெளியன் பதிவு:

பள்ளிச்சட்டம்பி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது இருக்கும் :

இந்த பள்ளிச்சட்டம்பி படத்தில் நடிகர் டோவினோ தாமஸ் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள நிலையில், வோர்ல்ட் வைட் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ 100 கோடி பொருட்செலவில் இருபடமானது தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் கயாடு லோஹருடன் நடிகர்கள் விஜயராகவன், ஸ்ரீஜித் ரவி மற்றும் பாபு ராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதன் ஷூட்டிங் கடந்த 2026 ஜனவரி தொடக்கத்திலே நிறைவடைந்த நிலையில், அதை தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக இருந்துவருகிறது.

இதையும் படிங்க: லவ் என்றாலே போராட்டம் தானே.. காதல் குறித்து பிரதீப் ரங்கநாதன் பரபரப்பு பேச்சு!

இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படமானது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தயாராகிவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2026 ஏப்ரல் 1ம் தேதி அல்லது மார்ச் 31ம் தேதியில் வெளியாகி வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.