Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tovino Thomas : சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்ற டோவினோ தாமஸ்.. அட இந்த படத்துக்காகவா?

Septimius In Best Asian Actor Award : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகரின் ஒருவராக இருந்து வருபவர் டோவினோ தாமஸ். மலையாள சினிமாவில் பிரபல நடிகராக உள்ள இவருக்கு, சிறந்த ஆசிய நடிகருக்கான செப்டிமியஸ் விருதை வென்றுள்ளார். இது குறித்த வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tovino Thomas : சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்ற டோவினோ தாமஸ்.. அட இந்த படத்துக்காகவா?
டோவினோ தாமஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 05 Sep 2025 16:46 PM IST

மலையாள சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் டோவினோ தாமஸ் (Tovino Thomas). இவர் தமிழில் நடிகர் தனுஷின் (Dhanush) மாரி 2 (Maari 2) திரைப்படத்தில் அசத்தல் வில்லனாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது நடிகர் டோவினோ தாமஸ் முழுவதுமாக மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் நடிப்பில் இந்த 2025 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் நரிவேட்டை (Narivetta). இந்த படத்தில் டோவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்க, இயக்குநர் சேரன் (Cheran) வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தை இயக்குநர் அனுராஜ் மனோகர் (Anuraj Manohar) இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தின் இறுதியில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை தொடர்ந்தும் நடிகர் டோவினோ தாமஸ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் இந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற செப்டிமியஸ் விருது (Septimius Award) விழாவில் சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இந்த நரிவேட்டை படத்திற்காக இந்த விருதை நடிகர் டோவினோ தாமஸ் வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை திரையரங்கில் பார்த்த ஷாலினி அஜித்… வைரலாகும் போட்டோஸ்

இணையத்தில் வைரலாகும் டோவினோ தாமஸின் விருது அறிவிப்பு வீடியோ :

இரண்டாவது முறையாக செப்டிமியஸ் விருதை பெற்ற டோவினோ தாமஸ் :

நடிகர் டோவினோ தாமஸ் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட செப்டிமியஸ் விருதில், 2018 என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வாங்கியிருந்தார். அதை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த 2025 ஆம் ஆண்டு வெளியான நரி வேட்ட என்ற திரைப்படத்திற்காக பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : அனுஷ்காவின் காட்டி திரைப்படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனங்கள் இதோ!

இந்த நரிவேட்ட படமானது, கேரளாவில் வாழ்வாதாரத்துக்காக போராடும் பழங்குடியின மக்களின் கதையை பேசியிருந்தது. இந்த படத்திற்காக 2025ம் ஆண்டிற்கான செப்டிமியஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் டோவினோ ஹமாஸிற்கு சிறந்த ஆசிய நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

நரிவேட்டை திரைப்படம் :

கடந்த 2025, மே இறுதியில் வெளியான திரைப்படம் நரிவேட்டை. இந்த படத்தை இயக்குநர் அனுராஜ் மனோகர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் டோவினோ தாமஸ், சேரன், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.