Sivakarthikeyan : அடிக்கிறோமோ இல்லையோ தடுக்குறோம்.. வித்யுத் ஜாம்வால் பற்றி சிவகார்த்திகேயன் பகிர்ந்த சம்பவம்!
Sivakarthikeyan About Vidyut Jammwal : தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்ட படமாக மதராஸி உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல வில்லன் வித்யுத் ஜாம்வாலுடன் சண்டைக்காட்சியில் நடந்த நகைச்சுவையான சம்பவம் குறித்து சிவகார்த்திகேயன் ஓபனாக பேசியுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற திரைப்படம் அமரன் (Amaran). இந்த படமானது முன்னாள் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சாய் பல்லவி கதநாயகியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தை அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்துவந்த திரைப்படம்தான் மதராஸி (Madharaasi). இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR.Murugadoss) இயக்கியுள்ளார். முருகதாஸின் தயாரிப்பில் மான் கராத்தே படத்தின் சிவகார்த்திகேயன் நடித்திருந்த நிலையில், அவரின் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இணையான வில்லன் ரோலில் நடிகர் வித்யுத் ஜாம்வால் (Vidyut Jammwal) நடித்துள்ளார்.
இவர் துப்பாக்கி மற்றும் அஞ்சான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், சிவகார்த்திகேயனுடன் வித்யுத் ஜாம்வால் இணைந்து அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளாராம். இந்நிலையில், அவருடன் ஆக்ஷ்ன் காட்சியில் நடித்து குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளிப்படையாக பேசியுள்ளார். “வித்யுத் ஜாம்வால், சண்டை காட்சியில் அடிக்காமல் தடுத்தாலும், எனக்குதான் வலிக்கிறது” என்று சிவகார்த்திகேயன் நகைச்சுவையாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : தனுஷிற்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை! அட இந்த படத்திலா?
வித்யுத் ஜாம்வால் பற்றி சிவகார்த்திகேயன் பேசிய விஷயம்
அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “மதராஸியில் வில்லனாக யார் நடிக்கிறார் என்று முருகதாஸ் சாரிடம் கேட்டபோது, அவர் வித்யுத் ஜாம்வால் என கூறினார். அவரின் பெயரை கேட்டதும் அவர் மிகவும் பயங்கரமான ஆள் ஆச்சே என நினைத்தேன். அவரை முதல் நாள் பார்க்கும்போதே, அவரின் கையை பார்ப்பதற்கு கிரிக்கெட் பேட் மாதிரி இருந்தது. அவர் என்னிடம் கையை கொடுத்து, “ஹாய் சிவா என்ன சொன்னார். அப்போதே எனது கையை இறுக்கமாக பிடித்திருந்தார். நானும் அய்யயோ இவரிடம் வசமாக சிக்கிவிட்டோமே என நினைத்தேன். தொடர்ந்து மதராஸி படத்தின் க்ளைமேக்ஸ் சண்டை காட்சியும் நடந்தது, அப்போது நான் மனதில் நினைத்த ஒரே விஷயம், ” அடிக்கிறோமோ இல்லையோ, தடுக்குறோம் என நினைத்துக்கொண்டேன்.
இதையும் படிங்க : அனிருத்தின் வளர்ச்சியைப் பார்த்தா பிரமிப்பா இருக்கு – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
மதராஸி படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு :
The #Madharaasi MADNESS BEGINS with massive bookings all over 🔥🔥
150K+ tickets sold for #Madharaasi on @bookmyshow alone 💥💥
Book your tickets now!
🎟️ https://t.co/DiYIeLdzAtGRAND RELEASE TOMORROW.#DilMadharaasi#MadharaasiFromSep5 pic.twitter.com/ezUvAaVR0t
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) September 4, 2025
ஆனால் ஷூட்டிங்கின்போது அவர் அடிக்காமல் தடுக்கிறார், அவர் தடுக்கும்போதே வலிக்கிறது. அவரை அடித்துவிட்டு எனக்குதான் கை வலி அதிகமாக இருந்தது. இந்த சண்டை காட்சியை பயங்கரமாக பண்ணவேண்டும், வித்யுத் சண்டை காட்சியில் மிகவும் பிரபலமான நபர். அவருக்கு எல்லாம் தெரியும், மேலும் மதராஸி படத்தின் க்ளைமேக் காட்சி நன்றாக வரவேண்டும் என்ற காரணத்தினால், நன்றாக ரிகர்செல் பார்த்து எல்லாம் அந்த சண்டை காட்சியை முடித்தோம். அது முடிந்த பிறகு வித்யுத் ஜாம்வால் என்னை பாராட்டினார்” என சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.