Dhanush : தனுஷிற்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை! அட இந்த படத்திலா?
D55 Movie Update : தமிழ் சினிமாவில் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் மட்டும் தமிழில் கிட்டத்தட்ட 3 படங்கள் உருவாகி வருகிறது. இதில், அமரன் பட இயக்குநருடன் தனுஷ் இணைந்த படம்தான் டி55. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக கோட் பட நடிகை நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

கோலிவுட் சினிமாவில் பல்வேறு நடிகர்கள் உள்ளனர். அதில் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளை செய்துவருபவராக இருப்பவர் தனுஷ் (Dhanush). இவர் இவரின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் தமிழில் இதுவரை பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (Nilavuku En Mel Ennadi Kobam). இந்த படத்தை நடிகர் தனுஷ் புதுமுக நடிகர்களை வைத்து இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் வெளியானது. இதை தொடர்ந்து, தற்போது நடிகர் தனுஷ் சினிமாவில் நடிப்பதில், மும்முரமாக இருந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் இட்லி கடை என்ற படம் வரும் 2025 அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகவுள்ளது.
அந்த வகையில் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periyasamy) இயக்கத்தில் டி55 (D55) படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், தற்போது இப்படத்தின் நடிகை யார் என்பது பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய்யின் (Vijay) கோட் படத்தில் நடித்த நடிகை மீனாட்சி சௌத்ரி (Meenakshi chaudhary) நடிக்கவுள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : லோகா படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் மின்னல் முரளி படத்தை மிஸ் பண்ணிடாதீங்க
தனுஷ் வெளியிட்ட டி55 படத்தின் அறிவிப்பு பதிவு :
Super thrilled to join hands with @Rajkumar_KP under @gopuramfilms with anbuchezhian sir. Om Namashivaaya 🙏🙏🙏 pic.twitter.com/ylarHSvN0v
— Dhanush (@dhanushkraja) November 8, 2024
தனுஷின் டி55 திரைப்படத்தின் அப்டேட் :
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் தனுஷ் ஒப்பந்தமான படம்தான் டி55. இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தை ஹிட் கொடுத்த கையோடு தனுஷுடன் ஒப்பந்தமானார். இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது.
இதையும் படிங்க : அனிருத்தின் வளர்ச்சியைப் பார்த்தா பிரமிப்பா இருக்கு – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
இந்த படத்தின் பூஜையானது கடந்த 2024 ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கும் தள்ளிப்போனது. இந்த படத்தில்தான் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷின் புதிய தமிழ் திரைப்படங்கள் :
தற்போது நடிகர் தனுஷ் , இயக்குநர் விக்னேஷ் ராஜ் இயக்கத்தில் டி54 படத்தில் இணைந்தார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் கடந்த 2025 ஜூலை மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்திலில் தனுஷ் டி56 என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தையும் வேல்ஸ் இன்டர்நெஷனல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இப்படம் வரலாற்று கதைக்களம் சார்ந்த படமாக உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.