நடிகர் கார்த்தி மீது எனக்கு அப்போ மரியாதை வந்தது… தனுஷ் சொன்ன சம்பவம்!
Actor Dhanush: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர்கள் தனுஷ் மற்றும் கார்த்தி. இந்த நிலையில் நடிகர் தனுஷ் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது நடிகர் கார்த்தி குறித்து வெளிப்படையாக பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் இறுதியாக குபேரா படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் மற்ற மொழிகளால தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி இருந்தார். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இவர்தான் ஃபிதா என்ற படத்தின் மூலம் நடிகை சாய் பல்லவியை தெலுங்கு சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் இட்லி கடை. இந்தப் படம் குபேரா படத்திற்கு முன்னதாகவே திரையரங்குகளில் வெளியாக வேண்டியது. ஆனால் படப்பிடிப்பு முடிவடையாத கரணத்தால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதனால் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஸ்க் மெய்ன் என்ற படத்திலும் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி நடிப்பு குறித்து புகழ்ந்து பேசிய நடிகர் தனுஷ்:
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கார்த்தியின் நடிப்பு குறித்து நடிகர் தனுஷ் புகழ்ந்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி கார்த்தி நாயகனாக அறிமுகம் ஆன பருத்தி வீரன் படத்தை நான் ரொம்ப லேட்டாதான் பார்த்தேன். படம் ரிலீஸானப்போ என்னால பார்க்க முடியல.
ஆடுகளம் படத்தில் நான் மதுரை ஸ்லாங்க் பேசனும்னு வெற்றிமாறன் சொன்னப்போ கார்த்தி மாதிரி பேசிடக்கூடாதுனு பருத்திவீரன் படத்தைப் பார்த்தேன். ஆனால் அவர் அதில் நடிப்பில் கலக்கி இருந்தார். அவர் மிகவும் எளிமையாக மதுரை ஸ்லாங்கை பேசியிருப்பார். எனக்கு அது ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்போதான் கார்த்தி மீது எனக்கு பெரிய மரியாதையே உருவானது என்றும் தனுஷ் கூறியிருந்தார்.
Also Read… எஸ்டிஆர் 49 படத்தில் நடிகர் சிம்பு இப்படிதான் இருப்பார் – இயக்குநர் ராம்குமார் கொடுத்த அப்டேட்!
நடிகர் தனுஷ் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
1 year of a film that’s so special to us. A million thanks. #D50 #Raayan pic.twitter.com/kHuGR2eDRR
— Dhanush (@dhanushkraja) July 26, 2025
Also Read… அஜித்திற்கும் பிரசாந்திற்கும் முன்பகை இருக்கும் போல – இயக்குநர் சொன்ன சம்பவம்