Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cinema Rewind: ஒரு சீனுக்காக 2 நாட்கள் பயிற்சி.. நடிகர் விஜய் பகிர்ந்த தகவல்!

Vijays Nanban Movie Single-Take Dialogue : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம்வருபவர் தளபதி விஜய். இவர் கடந்த 1992ம் ஆண்டு முதல் ஹீரோவாக சினிமாவில் நுழைந்த இவர் தற்போது வரை படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் முன்னதாக பேசிய ஒன்றில் நண்பன் படத்தில் வகுப்பறையில் பேசிய வசனத்தை ஒரே டேக்கில் முடித்தது பற்றிக் கூறியுள்ளார். அதைப் பற்றிப் பார்க்கலாம்.

Cinema Rewind: ஒரு சீனுக்காக 2 நாட்கள் பயிற்சி.. நடிகர் விஜய் பகிர்ந்த தகவல்!
தளபதி விஜய் நண்பன் திரைப்படம்Image Source: IMDb
Barath Murugan
Barath Murugan | Published: 16 Aug 2025 10:00 AM

தளபதி விஜய்யின் (Thalapthy Vijay) முன்னணி நடிப்பில் கோலிவுட் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. அவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம்தான் தி கோட் (The GOAT). இயக்குநர் வெங்கட் பிரபுவின் (Venkat Prabhu) இயக்கத்தில் வெளியான இப்படமானது பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்தாக, இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில் ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் நடித்துள்ளார். இப்படமும் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் வெளியாகிறது. இவ்வாறு தமிழ் சினிமாவில் வசூலை அள்ளிக்கொடுக்கும் நாயகனாக இருந்துவரும் விஜய், இயக்குநர் எஸ் . சங்கர் (S. Shankar) இயக்கத்தில் நடித்த படம்தான் நண்பன்.

இந்த படமானது இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் (3 Idiots) படத்தின் தமிழ் ரீமேக் படமாகும். இந்த படத்தில் தளபதி விஜய்  கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாகப் பாலிவுட் நடிகை இலியானா நடித்திருந்தார். மேலும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஜீவா மற்றும் சத்யராஜ் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் அறிவியல் விஞ்ஞானி வேடத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் கதைக்களமானது, கல்லூரி , காதல் மற்றும் நட்பு என முற்றிலும் வித்தியாசமாக அமைந்திருந்தது. விஜய்யின் நடிப்பில் வெளியான வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தளபதி விஜய் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், நண்பன் படத்தில் வகுப்பறையில் ஒரு புத்தகத்திற்கான விளக்கம் கொடுத்து. பெரிய டயலாக் ஒன்றைப் பேசியிருந்தார். அதை சிங்கிள் டேக்கில் சொல்ல, தான் எடுத்த பயிற்சியைப் பற்றி ஓபனாக பேசியிருந்தார்.

நண்பன் படத்தில் ஒரே டேக்கில் டயலாக் சொன்னது பற்றி விஜய் பேச்சு :

அந்த நிகழ்ச்சியில் நடிகர்கள், ஸ்ரீகாந்த், ஜீவா மற்றும் விஜய் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அதில் நடிகர் ஸ்ரீகாந்த், “விஜய் வகுப்பறை காட்சியில் உள்ள வசனத்தை ஒரே டேக்கில் கூறிவிட்டார்” என்று பேசியிருந்தார். அதை தொடர்ந்து பேசிய தளபதி விஜய் “அந்த டயலாக்கை பேச நான் பட்ட அவஸ்தை எனக்குத்தான் தெரியும், அந்த சீன் டயலாக் பேப்பரை சங்கர் சாரிடம் இருந்து ஒரு 3  நாட்கள் முன்பே வாங்கிக்கொண்டேன். இன்னும் 2 நாளில் அந்த காட்சியைத்தான் அவர் எடுப்பார் என எனக்குத் தெரியும், அதனால் அவரிடம் முன்னதாகவே வாங்கிடேன். அந்த வசனத்தை ஒரே டேக்கில் சொல்வதற்கு 2 நாட்கள் டைம் எடுத்துக்கொண்டேன்” என விஜய் பேசியிருந்தார்.

அதை தொடர்ந்து பேசிய தொகுப்பாளர், இந்த ஆர்வத்தை நீங்கள் உங்கள் கல்லூரி படிப்பில் கட்டியிருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு விஜய், “அதை நான் செய்திருந்தால் இப்படியா இருந்திருப்பேன்” என கூலாக பதில் சொல்லியிருந்தார். இந்த வீடியோவானது விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் நண்பன் படத்தில் விஜய் பேசிய அந்த டயலாக் தற்போதுவரையிலும் ரசிகர்கள் மத்தியில் பிடித்த காட்சியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், இதைத் தளபதி விஜய் ஒரே டேக்கில் பேசியிருக்கிறாரா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.