குஷி படத்தை நான் தேர்ந்தெடுக்கக் காரணமே அவர்தான் – விஜய் சொன்ன விஷயம்!
Reason For Vijay Acting In Kushi Movie : தளபதி விஜய்யின் நடிப்பில் கோலிவுட் சினிமாவில் எக்கச்சக்க திரைப்படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. அதில் ஒருபடம்தான் குஷி. இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிப்பதற்கு காரணமாக இருந்தது பற்றி விஜய் ஓபனாக பேசியுள்ளார். இது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்களின் நம்பிக்கை தூணாக இருந்து வருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) . இவர் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருந்து வருகிறார். கடந்த 1984ம் ஆண்டில் சினிமாவில் நுழைந்த விஜய், தற்போதுவரையிலும் சுமார் 33 வருடகாலமாக நடிகராக இருந்து வருகிறார். மேலும் தளபதி விஜய் இதுவரையில் சுமார் 68 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு (Naalaiya Theerpu) என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் திரைப்படங்களிலும் இணைந்து நடித்துவந்தார். தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை ஈர்த்தார் விஜய். இவரின் நடிப்பில் வெளியாகி மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றுதான் குஷி (Kushi) . கடந்த 2000ம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா (Jyothika) இப்படத்தில் நடித்திருந்தார்.
முற்றிலும் வித்தியாசமான கதையில் வெளியாகியிருந்த இப்படமானது பெரும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்றிருந்தது. இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா இயக்கியிருந்தார். காதல், நகைச்சுவை என மாறுபட்ட கதையில் இப்படமானது வெளியாகியிருந்தது.
இந்நிலையில், முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தளபதி விஜய், குஷி படத்தைத் தேர்ந்தெடுத்து நடித்ததற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி விளக்கமாகக் கூறியுள்ளார். அதற்குக் காரணம் வேறு யாருமில்லை எஸ்,ஜே. சூர்யாதான் என்று அவர் கூறியுள்ளார்.




குஷி படத்தில் நடித்ததற்காகக் காரணம் பற்றி தளபதி விஜய் பேச்சு :
முன்னதாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஒன்றில் மேடையில் பேசிய விஜய் குஷி படத்தில் நடித்தற்கான காரணம் பற்றிப் பேசியிருக்கிறார். அதில் அவர், “குஷி திரைப்படமானது, எனது சினிமா கேரியரில் ஒரு முக்கியமான திரைப்படம். ஒருமுறை இயக்குநர் விக்ரமன் சார் என்னிடம் ஒரு கேள்வி கேட்டாரு, “எப்படி விஜய் நீங்கள் குஷி படத்தை சூஸ் பண்ணீங்க, அதில் கதை என்று என்ன இருக்கு , எப்படி பண்ணீங்க” என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் அவரிடம் கரெக்டுதான் சார், நீங்கள் சொன்னது சரிதான். ஆனால் எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஜே. சூர்யானு ஒருத்தர் இருக்காரு சார். அவரு கதை சொல்லி ஒருமுறை நீங்கள் கேட்கணும் சார்.
அவரு கதை நரேஷனில் ஒரு கிங்கு சார், அவர் கதை சொன்னால் நமக்குக் கொஞ்சம் கூட மனசு வேறு எங்கேயும் செல்லாது. அவர் கதை சொல்ல ஆரம்பித்த விதம், அவர் ஒவ்வொரு காட்சியையும் என்னிடம் எடுத்துரைத்த விதத்திலே நான் மயங்கிவிட்டேன் சார். அந்த காரணத்தில்தான் குஷி படத்தில் நடித்தேன் என விக்ரமன் சாரிடம் நான் கூறினேன்” எனத் தளபதி விஜய் ஓபனாக பேசியிருந்தார். குஷி படத்தில் நடிப்பதற்கு எஸ்.ஜே. சூர்யாவின் கதை நரேஷன்தான் காரணம் எனத் தளபதி விஜய் தனது கருத்தை ஓபனாக கூறியிருந்தார்.