Arya 40: ஆர்யாவின் 40வது படத்தில் இணைந்த இரு நடிகைகள் – வைரலாகும் பதிவு!
Arya40 Movie Update: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்கள் லிஸ்டில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவரின் நடிப்பில் புதிதாக தயாராகிவரும் படம்தான் ஆர்யா40. இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பரில் நடந்த நிலையில், தற்போது இப்படத்தின் நடிகையாக யார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஆர்யாவின் (Arya) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் தயாராகிவருகிறது. இதையும் கடந்து தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலுமே இவர் படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக, தமிழில் பெரிதாக எந்த படங்களுமே வெளியாகவில்லை. இவர் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் (Pa. Ranjith) இயக்கத்தில் வேட்டுவம் (Vettuvam) என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக நடைபெற்றுவரும் நிலையில், இதையடுத்து சார்பட்டா 2 (Sarpatta 2) படத்திலும் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நடிகர் ஆர்யா தனது 40வது (ஆர்யா40 ) (Arya40) படத்தில் இணைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றிருந்தது. இதில் ஆர்யா மற்றும் ஷாய்ஷா இணைந்து கலந்துகொண்டிருந்தனர்.
இப்படத்தின் நடிகைகள் யார் என அப்போது அறிவிக்கப்படவில்லை என்ற நிலையில், தற்போது ஆர்யாவின் 40வது படத்தில் இரு கதாநாயகிகள் நடித்துவருகிறார்களாம். அது வேறு யாராயுமில்லை நடிகை நிகிலா விமல் (Nikhila Vimal) மற்றும் தெலுங்கு நடிகை வைஷ்ணவிதான் (Vaishnavi). ஜிம்மில் தன்னுடன் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி இருவருடன் இருப்பதுபோன்ற புகைப்படத்தை, ஆர்யா எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: விஜய் சேதுபதி பட இயக்குநருடன் இணையும் நடிகர் சூர்யா… இணையத்தை கலக்கும் தகவல்
ஆர்யா40 பட நடிகைகள் குறித்து நடிகர் ஆர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Working out in progress 🔥🔥🔥
Loading #Arya40 @NikhilMuraly @Nikhilavimal1 @iamvaishnavi04 @gvprakash @JeevaSankar pic.twitter.com/Ki3coa8KKt— Arya (@arya_offl) March 9, 2026
ஆர்யா, வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கை முடித்ததாக கூறப்படும் நிலையில், தற்போது தனது 40வது படத்தில் இணைந்துள்ளார். இன்னும் இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்படாத நிலையில், தற்காலிகமாக ஆர்யா40 என்றே அழைக்கப்பட்டுவருகிறது. இந்த் படத்தை இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே நான், அமர காவியம் மற்றும் எமன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதையடுத்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின் தமிழில் மீண்டும் இயக்குநராக படத்தை இயக்கவுள்ளார்.
இதையும் படிங்க : திருமண கொண்டாட்டங்கள் ஓவர்.. நெக்ஸ்ட் ஷூட்டிங்கிற்கு தயாரான விஜய் தேவரகொண்டா?
இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் நிலையில், நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி இருவருமே இணைந்து நடிக்கிறார்கள். இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகிவருவதாக கூறப்படும் நிலையில், இதற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துவருகிறார். மேலும் இதை தயாரிப்பாளர் நிகில் முரளி தயாரித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் துவங்கிய நிலையில், இந்த 2026ம் ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.