Arya: இதுவரைக்கு அந்த மாதிரி படத்தில் நடித்ததில்லை.. இதுவே முதல் தடவை – ஆர்யா சொன்ன விஷயம்!
Arya About Spy Thriller Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்துவருபவர் ஆர்யா. இவரின் நடிப்பில் தொடர்ந்து சினிமாவில் படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், முதல் முறையாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அது என்ன என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்து வருபவர் ஆர்யா (Arya). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் “காதர் பாஸா என்ற முத்துராமலிங்கம்” (Kathar Basha Endra Muthuramalingam). இந்த படத்தை இயக்குநர் முத்தையா (Muthaiah) இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியானது. இதை அடுத்ததாக நடிகர் ஆர்யாவின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டில் தமிழில் எந்த படங்களும் வெளியாகவில்லை. மேலும் இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இவரின் நடிப்பில் மிஸ்டர் எக்ஸ் (Mr. X), வேட்டுவம் (Vettuvam), அனந்தன் காடு (Ananthan Kaadu) போன்ற படங்கள் உருவாகிவருகிறது. இதில் இயக்குநர் மனு ஆனந்த் (Manu Anand) இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் மிஸ்டர் எக்ஸ்.
இந்த படத்தில் ஆர்யா முன்னணி நாயகனாக நடித்திருக்கும் நிலையில், நடிகை அனகா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் படமாக தயாராகியுள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தை பற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய ஆர்யா, “இந்த படத்தை போல வேறு எந்த படத்திலும் இதுபோன்று நடித்ததில்லை” என்று தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டிற்குள் வெடிக்கும் சண்டை… விஜய் சேதுபதி அதிரடி முடிவு!
மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்த ஆர்யா:
அந்த நேர்காணலில் தொகுப்பாளர் ஆர்யாவிடம், மீகாமன் திரைப்படம் போல ஒரு ஆக்ஷ்ன் நிறைந்த திரைப்படம் அடுத்ததாக நடிக்கிறீர்களா ? என கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆர்யா, “மீகாமன் படம் போல ஒரு படத்தில் நடித்திருக்கிறேன், அந்த படத்தைப் போலவே முழுவதுமாக இருக்காது. அந்த படத்தின் ஜானரில் ஒரு புதிய படத்தில் நடித்திருக்கிறேன். இந்த புதிய படம் ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
இதையும் படிங்க: பார்வையாளர்களுக்கு எப்போதும் ட்ரெய்லரில் ஒரு சர்ப்ரைஸ் வைப்பேன் – விஷ்ணு விஷால்
அதுதான் மிஸ்டர் எக்ஸ் திரைப்படம். இந்த மிஸ்டர் எக்ஸ் படமானது வரும் 2025 நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் வெளியாகும். மேலும் இந்த படத்தை போல வேறு எந்த படத்திலும் நான் இதுவரைக்கும் நடித்ததில்லை, நிச்சயமாக இந்த படமானது எல்லாரும் பிடிக்கும் என நினைக்கிறேன்” என அந்த நேர்காணலில் நடிகர் ஆர்யா தெரிவித்திருந்தார்.
அனந்தன் காடு திரைப்படம் குறித்து ஆர்யா வெளியிட்ட பதிவு :
Here’s the Title Teaser & First look posters of #Ananthankaadu
Hope u all like it 😍🤗Tamil:
▶️ https://t.co/kTOBdYURM3Malayalam
▶️https://t.co/L0EGFXZStM@ministudiosllp @vinod_offl @JiyenKrishna @AJANEESHB @aditi1231 @divomusicindia @RIAZtheboss @ParasRiazAhmed1 pic.twitter.com/w44T2W7hhG— Arya (@arya_offl) June 9, 2025
இந்த மிஸ்டர் எக்ஸ் படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்க, ஆர்யா முன்னணி நாயகனாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு இணையான வேடத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் அனகா, மஞ்சு வாரியர், சரத்குமார், ரைசா மற்றும் காளி வெங்கட் என பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப்பணிகளில் இருந்துவருகிறது.