புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 படங்கள் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த செல்வராகவன்
Director Selvaraghavan: தமிழ் சினிமாவில் இயக்குநர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் இயக்குநர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல நடிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் கஸ்தூரி ராஜா. இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரது மகன்கள் இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகினர். அதில் மூத்த மகன் செல்வராகவன் (Director Selvaraghavan) இயக்குநராகவும் இளைய மகன் தனுஷ் (Actor Dhanush) நாயகனாகவும் அறிமுகம் ஆகினர். இருவரும் வாரிசுகளாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் அவர்களின் திறமையால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னிலை வகித்து வருகின்றனர். அதன்படி இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படங்களும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இருவரும் தங்களது துறைகளில் சிறப்பாக விளங்கி வருகின்றனர்.
இது மட்டும் இன்றி தொடர்ந்து இயக்குநராக இருந்துவந்த செல்வராகவன் தற்போது நடிகராக தொடர்ந்து நடித்து வரும் நிலையில் நடிகராக இருந்துவந்த நடிகர் தனுஷ் தற்போது தொடர்ந்து படங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்திவருகின்றனர். இந்த நிலையில் செல்வராகவன் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்யன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதன்படி இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளின் போது இயக்குநர் செல்வராகவன் பேசியது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.




புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 படங்களின் அப்டேட் இதோ:
அதன்படி இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் முன்னதாக வெளியான புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை ரசிகர்கள் கல்ட் படம் என்று கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்தப் படங்களின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இயக்குநர் செல்வராகவன் ஒரு தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களின் கதைகள் 50 சதவீதம்வரை முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… 30 ஆண்டுகளை நிறைவு செய்தது கமல் ஹாசனின் சூப்பர் ஹிட் குருதிப்புனல் படம்
இணையத்தில் கவனம் பெறும் செல்வராகவனின் பேச்சு:
🎬 #Selvaraghavan confirms it!
Script work for #Pudhupettai2 & #AayirathilOruvan2 is underway! 💥“Pudhupettai2 is 50% done, #AO2 writing in progress. The story must satisfy me. ✍️#Karthi & #Dhanush are busy for the next 3 years.”
— Movie Tamil (@_MovieTamil) October 24, 2025
Also Read… மமிதா பைஜுவா இது? இணையத்தில் வைரலாகும் பழைய வீடியோ!