Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆரஞ்சு ஜூஸ் டாஸ்க்.. தவறாக முடிவெடுக்கும் பார்வதி.. எதிரான ஒட்டுமொத்த பிக் பாஸ் ஹவுஸ்!

Bigg Boss 9 Tamil : 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கிய ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ். இந்த சீசன் தொடங்கி இன்றுடன் 17 நாட்களான நிலையில், பல்வேறு விதமான டாஸ்க்,போட்டிகள் நடைபெற்றுவருகிறது. அதில் இன்று வெளியான முதல் இரு புரோமோவில், ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் பார்வதியை எதிர்க்கும் வீடியோ வைரலாகிவருகிறது.

ஆரஞ்சு ஜூஸ் டாஸ்க்.. தவறாக முடிவெடுக்கும் பார்வதி.. எதிரான ஒட்டுமொத்த பிக் பாஸ் ஹவுஸ்!
பிக் பாஸ்
Barath Murugan
Barath Murugan | Published: 22 Oct 2025 16:52 PM IST

தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்து வருவது பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழில் ஆண்டுதோறும் வெளியாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியை சீசன் 7 வரை கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்துவந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சி கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இன்றுடன் சுமார் 17 நாட்களாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது மொத்தம் 17 போட்டியாளர்கள் மட்டுமே இந்த பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமையன்று பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் தீபாவளியும் கொண்டாடப்பட்டிருந்தது.

அந்த வகையில் மற்ற சீசன்களை ஒப்பிடும்போது, இந்த பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் தொடர்ந்து பல்வேறு விதமான பிரச்னைகள், ஒழுங்கற்ற விஷயங்கள் என பல்வேறு விஷயங்கள் நடந்துவருகிறது. அந்த வகையில் இன்று பிக்பாஸ் சீசன் 9 தமிழ் தொடங்கி 17 நாளான நிலையில், இன்று வெளியான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த ப்ரோமோவில் ஒட்டுமொத்த பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பார்வதியை எதிர்ப்பதுபோல உள்ளது.

இதையும் படிங்க: ‘சூப்பர் மாரி சூப்பர்’… பைசன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!

பிக்பாஸ் சீசன் 9 தமிழ் புரோமோ வீடியோ பதிவு :

இந்த முதல் புரோமோவில் ஆரஞ்சு ஜூஸ் டாஸ்க் நடைபெறுகிறது, அதில் பார்வதி மற்றும் வாட்டர்மெலான் திவாகர் நடுவராக இருக்கின்றனர் . அப்போது ஆதிரை அணி கொண்டுவரும் ஜூஸை தரம் நன்றாக இல்லை என பார்வதி முடிவெடுக்கிறார்.

இதையும் படிங்க: தனுஷ் வழியில் பிரதீப் ரங்கநாதன்.. என்ன விஷயம் தெரியுமா?

இந்த முடிவானது ஒட்டுமொத்த அணியினரிடையேறும் கோபத்தை ஏற்படுத்தியள்ளது. இதனால் கலையரசன் நடுவரின் மேஜையை தூக்கிவீசியுள்ளார். மேலும் கனி மற்றும் கலையரசன் செய்யும் விஷயமும் பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் 9 தமிழில் 17வது நாளின் 2வது ப்ரோமோ :

இந்த ப்ரோமோ வீடியோவில் பார்வதி மற்றும் வாட்டர்மெலான் திவாகருக்கும் இடையே வாய் தகராறு நடைபெறுகிறது. இவர்கள் இருவரும் நடுவராக இருக்கும் நிலையில், இவர்களுக்குள்ளே சண்டைகள் ஏற்பட்டு பார்வதி, தனியாக சென்று அழுவதுபோல் இந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று பிக் பாஸ் எபிசோடு முழுவதும் சண்டை, வாய் தகராறு மற்றும் அழுகையுடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.