கவினின் மாஸ்க் படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!
Mask Movie: நடிகர் கவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்க். இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளது.

நடிகர் கவின் (Actor Kavin) நடிப்பில் தொடர்ந்து லிஃப்ட் படத்தில் இருந்து வெற்றி முகமாகவே உள்ளது. அதன்படி லிஃப்ட் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் வெளியான டாடா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. வித்யாசமான கதையை கொண்ட இந்தப் படம் கவினின் சினிமா வாழ்க்கையில் ஒரு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடிகர் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து வெற்றியைப் பார்த்து வரும் நடிகர் கவினின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கிஸ்.
இந்தப் படத்தை டான்ஸ் மாஸ்டர் சதீஸ் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் இது தமிழ் சினிமாவில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தின் வெற்றி கவினை சினிமாவில் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. மேலும் இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.




மாஸ்க் படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற ஜீ 5 நிறுவனம்:
இந்த நிலையில் நடிகர் கவின் தற்போது நாயகனாக நடித்து உள்ள படம் மாஸ்க். இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிபிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் சிங்கிள் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாஸ்க் படத்தின் ஓடிடி உரிமையை ஜீ 5 நிறுவனம் பெற்றுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… சூர்யாவின் கருப்பு படத்திலிருந்து வெளியானது ‘GOD MODE’ லிரிக்கள் வீடியோ!
நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Team #Mask Wishes everyone a joyous and prosperous Diwali ✨@GrassRootFilmCo @BlackMadras1 @tsmgo_official #VetriMaaran @Kavin_m_0431 @andrea_jeremiah @gvprakash @Raasukutty16 @iRuhaniSharma @RDRajasekar #RamarEditor @jacki_art @PeterHeinOffl @RIAZtheboss @PoorthiPravin… pic.twitter.com/telDahmJxL
— Andrea Jeremiah (@andrea_jeremiah) October 20, 2025
Also Read… டியூட் படத்தின் 3-நாள் வசூல் எவ்வள்வு தெரியுமா? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு